அடுத்தடுத்து அட்மிட் ஆன 5 பேர்.. பெங்களூரில் ஒரே நாளில் ஷாக்கிங்.. அதிகரிக்கும் கொரோனா அச்சம்!
பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஹைதராபாத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் பணி நிமித்தமாக இவர் துபாய் சென்றுள்ளார். அங்குதான் இவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. ஹாங்காங் நண்பர்களிடம் இருந்து இவருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் எப்படி
கொரோனா வைரஸ் தாக்குதலுடன் இவர் பெங்களூர் வந்துள்ளார். பெங்களூரில் நான்கு நாட்கள் தங்கி இருக்கிறார். இதனால் பெங்களூருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 25 மாடி குடியிருப்பில் இருக்கிறார். அலுவலக பேருந்தில் அலுவலகத்திற்கு சென்று திரும்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதனால் அவர் சென்ற இடங்கள், அவர் பணியாற்றும் ஐடி நிறுவனங்களில் கடும் சோதனை நடந்து வருகிறது.

பெங்களூர் எப்படி
இதனால் தற்போது பெங்களூரில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மக்கள் பலர் மாஸ்க் அணிந்து சுற்றி வருகிறார்கள். அதேபோல் அரசு சார்பாக பெங்களூரில் மிகவும் சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் பொது இடங்களில் கூட கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் விமான நிலையத்தில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மக்கள்
இன்னொரு பக்கம் பெங்களூருக்கு வரும் வெளிநாட்டு மக்கள், வடஇந்தியர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் இன்னும் ஐந்து பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறி ஏற்பட்டுள்ளது.இவர்கள் எல்லோரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

என்ன சோதனை
இதில் ஒருவர் அந்த ஐடி இளைஞரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஒரே நாளில் இவர்கள் அட்மிட் ஆகியுள்ளனர். இரண்டு பேருக்கு இதில் வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தீவிரமாக இருக்கிறது. இவர்களின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும். பெங்களூரில் இந்த வைரஸ் அச்சம் தீவிரமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications