கர்நாடகா: தலைதூக்கும் JN1 வைரஸ்- 34 பேருக்கு பாதிப்பு- 3 பேர் பலி- முன்னெச்சரிக்கையா இருக்க அட்வைஸ்!
பெங்களூர்: கர்நாடகாவிலும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் JN1 பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் JN1 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லேசாக அதிகரித்து வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

கர்நாடகாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்தது. முந்தைய நாள் கர்நாடகா கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக இருந்தது. கர்நாடகாவில் கொரோனா பாதித்த 125 பேரில் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை மொத்தம் 4170 ஆக உள்ளது.
கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125
கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்கள் 30
கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 436.
இந்த 125 பேரில் பெங்களூரில் 20 பேருக்கும் மைசூரில் 3; ராமநகர், பெங்களூர் புறநகர், குடகு, சாம்ராஜ்நகரில் தலா ஒருவருக்கும் JN1 வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 3,155 பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 125 பேரில் பெங்களூரில் மட்டும் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மைசூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆக்டிவ் கேஸ்களில் பெங்களூர், தாவணகெரே, ஹாசனில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.
இது தொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications