லாக்டவுனை கேலிக்கூத்தாக்கிய தேவகவுடா வீட்டு கல்யாணம்.. பண்ணை வீட்டில் ஆடம்பர அமர்க்களம்
பெங்களூரு: நாடு முழுவதும் அமலில் உள்ள லாக்டவுனை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் திருமணம் பண்ணை வீட்டில் ஆடம்பரமாக இன்று நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் இன்று பெங்களூரு பண்ணை வீடு ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு அடுத்த ராமநகராவில் பண்ணை வீடு ஒன்றில் நேற்று இரவு முதலே திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டார் கூட்டமும் அலைமோதியது. இந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என்பதற்காகவே ராமநகராவுக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
ராமநகரா பண்ணை வீட்டுக்கு நேற்று சுமார் 40 கார்கள் சென்றன. லாக்டவுன் காலத்தில் இத்தனை கார்களை எப்படி அனுமதித்து போலீஸ் என்ற கேள்விக்கு, தங்களிடம் பதிவு செய்துவிட்டுதான் கார்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் போலீஸ் தந்த பதில்.
லாக்டவுன் காலம் என்பதால் எந்த ஒரு பொது ஒன்றுகூடலுக்கும் அனுமதி கிடையாது. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் மிக குறைவான நபர்கள்தான் அனுமதிக்கப்பட்டும் தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் லாக்டவுனை கேலிக்கூத்தாக்குகிற வகையில்தான் கவுடா குடும்பத்து திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த குமாரசாமி, அரசிடம் உரிய அனுமதி பெற்றே திருமணம் நடத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதேபோல் எடியூரப்பா அரசும் கூட, குமாரசாமி வீட்டு திருமணம் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்படும். இதில் லாக்டவுன் விதிகள் மீறப்பட்டிருந்தால் சட்டப்படியான நடவடிக்கை பாயும் என எச்சரித்திருந்தது.
ஆனால் இன்றைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள், லாக்டவுன் விதிகளைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல்தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இதனால் தேவகவுடா வீட்டு திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications