பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிருக்கு போராடிய 22 பேர்.. சோனு சூட்டிற்கு பறந்த எஸ்ஓஎஸ் கால்.. ஆக்சிஜனோடு வந்த ரட்சகன்.. உருக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆக்சிஜன் இல்லாமல் போராடிய 22 பேரின் உயிரை நடிகர் சோனு சூட் மற்றும் அவரின் டீம் காப்பாற்றி உள்ளது.

Recommended Video

    உயிருக்கு போராடிய 22 பேரை காப்பாற்றிய Sonu Sood | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே நடிகர் சோனு சூட் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதலில் உதவிகளை செய்ய தொடங்கியவர், தற்போது தனியாக ஹெல்ப்லைன் எண்களை உருவாக்கி, தனி அரசாங்கமே நடத்தி வருகிறார்.

    ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் இல்லாத நேரங்களில் உதவுவது தொடங்கி கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பெட் பெற்றுத்தருவது வரை பல உதவிகளை சோனு சூட் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

    செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுபாடு.. இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள்செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுபாடு.. இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள்

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் பெங்களூரில் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிய 22 பேரின் உயிரை சோனு சூட் மற்றும் அவரின் டீம் காப்பாற்றி இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை பெங்களூர் ஏஆர்ஏகே மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென ஆக்சிஜன் தீர்ந்து போனது. அங்கு 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் உதவியில் இருந்துள்ளனர்.

    மோசம்

    மோசம்

    இந்த விஷயம் தெரிந்த பெங்களூர் எலஹங்கா காவல்நிலைய ஆய்வாளர் எம்ஆர் சத்தியநாராயணன், உடனே சோனு சூட் டீமிற்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தினார். ஆக்சிஜன் தேவை என்று.. சோனு சூட்டின் உதவி மையத்திற்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். இந்த போன் கால் செல்லும் முன்பே அங்கு 2 பேர் ஆக்சிஜன் இன்றி பலியாகிவிட்டனர்.

    உதவி

    உதவி

    மீதம் 22 பேர் உயிருக்கு போராடி உள்ளனர். இந்த நிலையில் இந்த எஸ்ஓஎஸ் போன் வந்த அடுத்த நொடியே சோனு சூட்டிற்கு இது தொடர்பாக தகவல் சென்றுள்ளது. திங்கள் கிழமை இரவு முழுக்க சோனு சூட் மொத்தமாக தனது அணியை ஒருங்கிணைத்து, பெங்களூர் முழுக்க அலைந்து, உடனே 2 சிலிண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார். தற்காலிகமாக இரண்டு சிலிண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார்.

    ஏற்பாடு

    ஏற்பாடு

    பின்னர் மீண்டும் இரவு முழுக்க அலைந்து மேலும் 14 சிலிண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார். சோனு சூட் தனக்கு இருந்த காண்டாக்ட் மற்றும் தனது அணியின் பலம் காரணமாக இரவு முழுக்க அலைந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார். இந்த 16 சிலிண்டர்கள் வந்த பின்.. அந்த மருத்துவமனையில் இருந்து 22 உயிர்களும் காப்பாற்றப்பட்டன.

     உயிர்கள் பிழைத்தது

    உயிர்கள் பிழைத்தது

    இது தொடர்பாக பேசிய சோனு சூட், இது ஒரு குழு செயல்பாடு. நான் தனியாக எதுவும் செய்யவில்லை. எங்கள் டீம் மக்களுக்காக உதவுகிறது. எங்களுக்கு அந்த போன் வந்தவுடன், உடனே செயலில் இறங்கினோம். இரவு முழுக்க வேறு எந்த வேலையும் செய்யாமல் இதை பற்றி மட்டுமே கவனம் செலுத்தினோம்.

    தாமதம்

    தாமதம்

    கொஞ்சம் தாமதம் ஆகி இருந்தாலும் கூட சில உயிர்கள் போய் இருக்கும். இந்த தீர செயலில் ஈடுப்பபட்ட என் அணியினருக்கு நன்றிகள். இதேபோன்ற பணிகளை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். எங்களுக்கு பெங்களூர் போலீஸ் அதிகாரிகளும், மக்களுக்கு உதவினார்கள், அவர்களுக்கும் நன்றி, என்று சோனு சூட் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus; Sonu Sood and Team saved 22 lives by providing 16 O2 cylinders to a Bangalore Hospital last Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X