டுவிஸ்ட்.. “சேம் சைடு கோல்” அடித்த பாஜக ஆதரவாளர்கள்! ஊழல் அதிகம் - கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்பு
பெங்களூரு: சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் ஊழல் அதிகரித்து உள்ளதாக பாஜகவினரே தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இரு தேசிய கட்சிகளையும் வீழ்த்தி மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க உழைத்து வருகிறது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மாநில அரசுக்கு எதிரான ஊழல், கமிஷன் பிரச்சனைகள், ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், பாஜக உட்கட்சி பூசல், லிங்காயத்து மக்களின் எதிர்ப்பு, மதவாத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், இடஒதுக்கீடு சர்ச்சை போன்றவை பாஜகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றன.
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. இந்த நிலையில் என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் இணைந்து கர்நாடக மாநில தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளன. கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஊழல் குறித்த கேள்வியும் இடம்பெற்று உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 51 சதவீதம் வாக்காளர்கள் கர்நாடக மாநிலத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் ஊழல் அதே நிலையில் தொடர்வதாக கூறி இருக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 41 சதவீத பாஜக ஆதரவாளர்களே கர்நாடகவாவில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழல் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். பாஜகவினரே பாஜக ஆட்சியில் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications