Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கூட்டரில் புட் போர்ட்! அதுவும் பிஞ்சு குழந்தையை.. சாலையில் விபரீத பயணம்! நடுநடுங்கிய வாகன ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இரு சக்கர வாகனத்தில் கால் வைக்க கூடிய இடத்தில் குழந்தையை நிற்க வைத்தபடி தம்பதி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் பைக்கில் இப்படி பயணிக்கும் இந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதி மீறல்களே காரணமாக அமைகின்றன. விபத்துக்களை கட்டுப்படுத்த போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், ஒருபக்கம் போக்குவரத்து விதி மீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

Couple travel in bike with their child dangerously standing on the foot rest of schooter

புட் போர்டில் குழந்தை: அவ்வப்போது இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் சாலைகளில் சாகசம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கும் விதமாக அமைந்துள்ளது. பைக்கில் செல்லும் பெற்றோர் தங்களின் சிறு குழந்தையை ஃபுட் போர்டில் நிற்க வைத்தபடி செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜாக்கிரதையான பயணம்: இது குறித்த விவரம் வருமாறு: பெங்களூரில் உள்ள ஒயிட் ஃபீல்டு பகுதியில் பரபரப்பான சாலையில் மொபட்டில் செல்லும் ஒரு தம்பதி தங்களின் 4 வயது மதிக்கத்தக்க மகனை மொபைட்டின் புட் ரெஸ்ட்டில் நிற்க வைத்தபடி செல்கின்றனர். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள், ஆபத்தை கொஞ்சம் கூட உணராமல் இப்படி செல்கிறார்களே என மிரட்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

சக வாகன ஓட்டி ஒருவர் அந்த தம்பதி தங்கள் பிள்ளையுடன் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அந்த நபர், தங்கள் பிள்ளையின் உயிரை பணயம் வைத்து அஜாக்கிரதையுடன் செல்லும் இந்த பெற்றோர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நெட்டிசன்கள் ஆவேசம்: இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பதைபதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவை பார்த்து கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பெற்றோர்களின் முட்டாள் தனத்தால் பிஞ்சு குழந்தையின் உயிரை பணயம் வைப்பதா? என ஆவேசமாக பலரும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

போலீசார் நடவடிக்கை: இதனிடையே, போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் மொபைட்டை ஓட்டி செல்லும் வாகனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக பெங்களூரு நகர போலீசார் கூறியுள்ளனர். குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர்... இப்படி ஆபத்தை உணராமல் பைக்கில் செல்வதா என சில நெட்டிசன்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

நெட்டிசன்கள் கருத்து: மேலும், வெறும் அபராதம் மட்டும் போதாது, இந்த தம்பதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் பயணிக்கும் இந்த பெற்றோர் தங்கள் குழந்தையின் நலன் கருதியாவது பாதுகாப்பாக பயணம் செய்து இருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

மேலும் சில நெட்டிசன்களோ இதுபோன்ற விதி மீறல்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான் இனிமேல் இத்தகைய அஜாக்கிரதையான சம்பவங்கள் தொடராது என்றும் காட்டமாக கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+