போர்வைக்குள் ஆட்டோவில் பெண்.. 3 கள்ளக்காதலர்களா? பெங்களூரு சீக்ரெட் லவ் ஸ்டோரியில் அதிரடி திருப்பம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. நேற்று முன்தினம் நடந்த ஒரு கொலை சம்பவம் பெங்களூருவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் கொலைக்கான காரணத்தையும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு திலக்நகர் பகுதியில் நேற்று முன்தினம் சாயங்காலம் சாலையோரத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. வெகு நேரமாக அந்த ஆட்டோ நின்று கொண்டேயிருந்த நிலையில், அந்த வழியாக சென்று வந்தவர்களுக்கு சந்தேகம் வந்தது.

பிறகு அந்த ஆட்டோவில் எட்டிப்பார்த்தபோது, ஏதோ ஒரு பொருளை, போர்வையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் பயந்துபோய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், ஆட்டோவை சோதனை செய்தபோது, போர்வையை விலக்கி பார்த்தனர்.. அப்போதுதான் அதற்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோவில் போர்வை
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தியபோது, இறந்த பெண்ணின் பெயர் சல்மா என்பதும், திருமாணமான சல்மாவுக்கு சுப்பிரமணியன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், பிறகு சுப்பிரமணியனுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த கொலை விஷயத்தில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்களை போலீசார் தற்போது வெளிக்கொணர்ந்துள்ளனர்.. அதாவது, சல்மாவுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், சல்மாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்..
இதனால் சல்மா 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
கள்ளக்காதல் தகராறு
இந்நிலையில், கள்ளக்காதலர்களுக்குள் தகராறு வெடித்துள்ளது.. இந்த வாக்குவாதம் முற்றிப்போய், சுப்பிரமணி சல்மாவை கட்டையால் அடித்து தாக்கியிருக்கிறார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சல்மா கீழே விழுந்துவிடவும், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த சுப்பிரமணி அருகிலிருந்த ஆட்டோவின் பின் சீட்டில், உடலை போர்வையால் சுற்றி வைத்துவிட்டு தலைமறைமானது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் சுப்பிரமணியன்தான் குற்றவாளி என்பதை அறிந்து போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போதுதான் இந்த கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
போர்வைக்குள் பெண்
அதாவது, KHB காலனியை சேர்ந்தவராம் இந்த சுப்பிரமணி,.. 32 வயதாகிறது.. இவரது நண்பர் பெயர் செந்தில்.. 28 வயதாகிறது.. இவர்கள் இருவருமே தினக்கூலிகளாக வேலை செய்து வந்திருக்கிறார்கள்.. இதனை தவிர ஓவியம் வரைதல், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.
சல்மாவின் கணவர் ஒரு வருடம் முன்பு இறந்துவிட்ட நிலையில், சல்மா அங்குள்ள பகுதியிலேயே வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.. ஆனால், சல்மாவிடம் சுப்பிரமணியன், செந்தில் இருவருமே தவறான உறவில் இருந்து வந்துள்ளனர்.. இருவருமே சல்மாவுக்கு பண உதவியை செய்து வந்துள்ளனர்..
சல்மாவின் 3 கள்ளக்காதல்
எனினும்கூட, இவர்கள் 2 பேரை தவிர, சல்மாவுக்கு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சுப்பிரமணியனும் செந்திலும் அதிர்ச்சியடைந்தனர்.. இதுகுறித்துதான் சம்பவத்தன்று, சல்மாவிடம் இருவருமே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்..
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான், சல்மாவை இருவருமே கூர்மையான பொருளால் தலையில் தாக்கி கொன்றுள்ளனர்.. சல்மா இறந்துவிட்டார் என்பது உறுதியனாதுமே, சடலத்தை இருவருமே ஒரு போர்வையில் சுற்றி, திலக் நகர் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.. அந்த வழியாகச் சென்ற ஒருவர்தான், போர்வையை பார்த்து பயந்துபோய், போலீசுக்கு சொல்லி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. நேற்று முன்தினம் நடந்த ஒரு கொலை சம்பவம் பெங்களூருவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் கொலைக்கான காரணத்தையும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக்












Click it and Unblock the Notifications