பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் தனித்து போட்டியிட வேண்டி வரும்.. காங்கிரசுக்கு தேவகவுடா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

பெங்களூர்: காங்கிரஸ் கட்சி தனித்துச் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள மஜத தலைவர் எச்.டி.தேவகவுடா, வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவிலுள்ள அனைத்து தொகுதிகளிலும், தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மஜதவின் குமாரசாமி முதல்வராக உள்ளார். கூட்டணிக்குள் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வருகிறது.

Deve Gowda threatens to contest alone unless Congress behaves in Karnataka

இந்த நிலையில், தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக தேவகவுடா அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியான எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும். 28 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிட நேரிடும். எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றபோதிலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது என்றார் அவர்.

English summary
JD(S) supremo Deve Gowda has thrown an open warning to Congress party, that his party can go alone in Karanatak Lok Sabha elections, and fight all 28 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X