தர்மஸ்தலாவில் திடீரென மனித எலும்பு எச்சம் கண்டுபிடிப்பு.. தோண்டும்போதே கிளம்பிய பூதம்! பதற்றம்
பெங்களூர்: கர்நாடகா தர்மஸ்தலா வழக்கில் இன்று விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அங்கு 11வது இடத்தில் இன்று விசாரணை நடந்த நிலையில், அங்கு மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விசாரணை நடந்து வரும் நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான ஆதாரமாக இது இருக்கிறது. இந்த எலும்புக்கூடு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தர்மஸ்தலா பகுதியில் அமைந்துள்ள கோயில் உலகெங்கும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகை தருவார்கள். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் இந்த கோயிலில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பகீர் புகார் அளித்திருந்தார்.

அதிகாரிகள் விசாரணை
இங்கு தான் வேலை செய்த 1995 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பல பெண்களின் உடல்களைப் புதைத்ததாக தெரிவித்தார். அந்த நபர் புகாரைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றுக்கு அருகில் இப்போது சோதனை செய்து வருகிறார்கள். அங்குக் குழி தோண்டி, மனித உடல்கள் எதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
மனித எலும்புக் கூடு
இதற்கிடையே இப்போது 11ஆம் இடத்தில் குழி தோண்டப்பட்ட நிலையில், அங்கு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் 6ஆவது நாளாக இன்று சோதனை நடத்தும் நிலையில், எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது என்ன எலும்புக்கூடு என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த எலும்புக்கூடுகள் இப்போது தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "ஆம், அந்த இடத்தில் சில மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை நாங்கள் இதைச் சரிபார்த்து வருகிறோம். சில ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கிறது. எல்லாம் முடிந்தவுடன் கூடுதல் தகவல்கள் வெளியாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாரணை முடிந்த பிறகே இருக்கும்" என ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
கிளம்பிய பூதம்
ஒரு வாரத்திற்கு மேலாக விசாரணை நடந்து வரும் நிலையில், இது முக்கியமான ஆதாரமாக இது இருக்கிறது. எலும்பு எச்சம் இப்போது தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த எலும்பு எச்சம் ஆணுக்குச் சொந்தமானதா.. இல்லை பெண்ணுக்குச் சொந்தமானதா என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை. வரும் நாட்களில் இந்த ஆதாரம் பெரிய பூதாகரமாக வெடிக்கும் என்று சொல்லப்படுகிறது..
புகார் அளித்த அந்த சம்பந்தப்பட்ட முன்னாள் தூய்மை பணியாளர், விசாரணை குழுவினர் உடன் 11ஆம் இடத்திற்குச் சென்றிருக்கிறார். அவர் அளித்த தகவலின்படியே சோதனைகள் எல்லாம் நடந்து வருகிறது. ஏற்கனவே ஆறாம் தளத்தில் பாதி எலும்புக்கூட்டு கண்டெடுக்கப்பட்டது. தலையில் இல்லாமல் இருந்த அந்த எலும்புக் கூடு ஆணின் எலும்புக்கூடு எனச் சொல்லப்பட்டது. அந்த எலும்புக் கூடும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பின்னணி
அந்த நபர் மொத்தம் 15 இடங்களைச் சொல்லியிருந்தார்.1998-2014 காலகட்டத்தில் தர்மஸ்தலாவில் பெண்கள், சிறுமிகள் உடல்களைப் புதைக்கவும் எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பல உடல்களில் பாலியல் வன்கொடுமை அறிகுறிகள் இருந்ததாகவும் அந்த தூய்மை பணியாளர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்ன இடங்களில் எட்டு நேத்ராவதி ஆற்றங்கரையோரம் உள்ளன. 9-12 ஆம் இடங்கள் ஆற்றுக்கு அருகில் நெடுஞ்சாலையோரம் உள்ளன. 13 ஆம் இடம் நேத்ராவதி-ஆஜுகுரி சாலையிலும், மீதமுள்ள இரண்டு கன்னடி என்ற பகுதியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications