Dharmasthala: தர்மஸ்தலாவில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 80 உடல்கள்! 'ஸ்பாட் 13ஐ' டார்கெட் செய்த அதிகாரிகள்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களை புதைக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் தூய்மை பணியாளர் கூறியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஒரே இடத்தில் 70-80 உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பணியாளர் கூறிய நிலையில், அந்த பகுதியில் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தர்மஸ்தலாவில், கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூட்டு படுகொலைகள் நடந்ததாகவும், இவ்வாறு கொல்லப்பட்ட உடல்களை தான் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் சுகாதாரப் பணியாளர் கூறியிருந்தார். பணியாளரின் புகாரையடுத்து கடந்த மாதம், கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

புகார் அளித்தவர் கூறுகையில், தான் கடந்த 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் பணிபுரிந்ததாகவும், இந்த காலத்தில் பல உடல்களைப் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் ஒரு நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தியா டுடேவிடம் பேட்டியளித்த அவர், நேத்ராவதி நதிக்கு அருகில் உள்ள 'ஸ்பாட் 13'-ல் சுமார் 80 உடல்களை புதைத்ததாக தெரிவித்தார். சடலங்களை புதைக்க கோயில் நிர்வாகத்திடமிருந்து நேரடியாக உத்தரவுகள் வந்ததாகவும், உடல்களை வனப்பகுதிகளிலோ அல்லது பழைய சாலைகளிலோ புதைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அகழ்வாராய்ச்சி மற்றும் தேடுதல் நடவடிக்கைகள்
இதனையடுத்து கனமழை பெய்தபோதிலும், ஸ்பாட் 13-ல் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு 18 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், நிலம் ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில புதைப்பு இடங்கள் மறைந்திருக்கலாம் என்று தகவலளித்தவர் கருதினார். "நாங்கள் உடல்களை ஆழமாக புதைத்தோம். மற்ற உடல்கள் மலைகளில் புதைக்கப்பட்டன," என்று அவர் கூறினார். பகல் நேரத்தில் உள்ளூர்வாசிகள் பார்த்தும் தடுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை என்றும் அவர் கூறினார்.
சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் தகவல்கள்
சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு குழு பல இடங்களை ஆய்வு செய்தது. ஸ்பாட் 6, 11 மற்றும் 14 இல் சில எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது டிஎன்ஏ மற்றும் தடயவியல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications