நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலை முயற்சியா? கர்நாடகா உள்துறை அமைச்சர் தந்த விளக்கம்
பெங்களூர்: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் தர்ஷன் பெங்களூர் சிறையில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றிய கேள்விக்கு கர்நாடகா போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தர்ஷன். இவர் தனது ரசிகரான ரேணுகாசாமியை ஆள்வைத்து கொலை செய்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் சில நடிகர் தர்ஷன் பெங்களூர் சிறையில் மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி கர்நாடகா போலீஸ் அமைசசர் பரமேஸ்வரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு போலீஸ் அமைச்சர் கூறுகையில், ''நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி ஆகும். அதுபற்றி ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அது வெறும் வதந்தி மட்டுமே. அதனை யாரும் நம்ப வேண்டாம்'' என்றார்.
இதைடுத்து கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''நான் போலீஸ் அமைச்சராக 8 ஆண்டுகளாக இருந்துள்ளேன். இந்த 8 ஆண்டுகளும் போலீஸ் துறையை சரியான முறையில் நிர்வகித்து வந்துள்ளேன். போலீஸ் அமைச்சராக இருப்பதில் எந்த அதிருப்தியும் இல்லை. அமைச்சரவை மாற்றியமைக்கும் போது போலீஸ் துறையுடன், வேறு துறையையும் சேர்த்து வழங்கினாலும் திறம்பட நிர்வகிப்பேன்.
முதல் அமைச்சர் உள்ளிட்ட எந்த பதவிகளை காங்கிரஸ் தலைமை வழங்கினாலும், அதனை நிர்வகிக்க தயாராக இருக்கிறேன். அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது வேறு துறையை வாங்க நான் முடிவு செய்யவில்லை. போலீஸ் துறையில் இருந்து மாற்றி வேறு துறை வழங்கும்படி இதுவரை நான் கேட்டதும் இல்லை'' என்றார்.
அதன்பிறகு அவரிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், '' கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பெங்களூருவில் மாநாடு நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதுபற்றி போலீசார் பரிசீலனை நடத்தி அனுமதி அளிப்பார்கள். மாநாடு எங்கு நடக்கிறது?, யார் தலைமையில் நடக்கிறது?, எத்தனை பேர் பங்கேற்பார்கள்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் போலீசாரிடம் வழங்கினால், அதுபற்றி பரிசீலித்து முடிவு செய்வார்கள்'' என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications