முஸ்லிம் பெண்.. சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்து ஆவேசம்.. பாகல்கோட்டை பரபரப்பு.. !
முஸ்லிம்பெண் 2 லட்ச ரூபாய் பணத்தை சித்தராமையா காரில் விட்டெறிந்தார்
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் கடந்த வாரம் இரு தரப்பினரிடையே (இந்து - முஸ்லிம்) திடீர் மோதல் ஏற்பட்டது..
கோரூர் நகரை சேர்ந்த ஒரு சமூகத்தின் இளைஞர்கள் சிலர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் கேலி செய்ததாக தெரிகிறது.
கடந்த 6ம் தேதி, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா கெரூர் பஸ் நிலையத்தில், பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்..

தகராறு
இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் தட்டி கேட்டுள்ளனர்.. இது தகராறாக உருவெடுத்து, வன்முறையில் முடிந்தது... பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.. கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன... இரு தரப்பு மோதலில் பலர் படுகாயமடைந்தனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.. இறுதியில், கெரூர் நகரத்தில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, நிலவிய பதற்றத்தை தணித்தனர்.

சித்தராமையா
இந்நிலையில், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா நேரில் சந்தித்தார்.. பாதிக்கப்பட்ட ஹனீப், ராஜேசாப், ரஃபீக், தவால் மாலிக் ஆகியோரிடம் நலம் விசாரித்தார்... அத்துடன் அவர்களுக்கு 2 லட்சரூபாய் இழப்பீடு தொகையையும் வழங்கினார்.

முஸ்லிம் பெண்
அப்போது பாதிக்கப்பட்டவரின் உறவினரான முஸ்லிம் பெண் ஒருவரும் பணத்தை பெற்றார்.. பிறகு அவர், எங்களுக்கு பணம் வேண்டாம், நீதி மட்டுமே வேண்டும்.. எங்களை மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்" என்று ஆவேசத்துடன் சொன்னார்.. அங்கிருந்து சித்தராமையாவின் கார் புறப்பட்டபோது, அந்த பெண் சித்தராமையா கொடுத்த பணத்தை அவரது கார் மீது வீசி எறிந்தார்... அந்த பணம் காரின் அருகில் விழுந்தது... இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மனிதாபிமானம்
இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, எங்களுக்கு பணம் வேண்டாம். நீதி தான் வேண்டும்... சில விஷமிகள் வேண்டுமென்றே எங்கள் அமைதியை கெடுக்கிறார்கள்... அப்படிப்பட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்... இந்த சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. நடந்த நிகழ்வு பற்றி சித்தராமையா சொல்லும்போது, 'நான் ரூ.2 லட்சத்தை நிவாரணமாக கொடுக்கவில்லை. மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொடுத்தேன். தவறு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications