பெண் எம்பியின் இடுப்பில் கை வைத்தாரா கர்நாடக முதல்வர்.. வீடியோவால் திடீர் பரபரப்பு!
பெங்களூர்: நடிகையும் மாண்டியா சுயேச்சை எம்பியுமான சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
நேற்று கர்நாடகாவில் இருக்கும் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.
இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்எல்ஏக்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

யார் வந்தனர்
இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வந்து இருந்தார். அதேபோல் மாண்டியா தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்பி நடிகை சுமலதா வருகை புரிந்து இருந்தார். இவர் இருவரும் சேர்ந்து அங்கு காவிரி நேரில் பூக்களை தூவி, பின் அணையை திறந்தனர். இந்த விழாவில் நடந்த சம்பவம்தான் எடியூரப்பாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

இடுப்பு புகார்
இந்த விழாவில் சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீருக்கு பூ போடும் போது சுமலதா இடுப்பில் எடியூரப்பா கை வைப்பது போல காட்சிகள் பதிவாகி உள்ளது. இதை சுமலதா கோபத்தில் எடியூரப்பாவிடம் பேசுவது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

விவாதம்
உண்மையில் சுமலதா கோபத்தில் பேசினாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிகழ்விற்கு பின் உடனே எடியூரப்பா சுமலதா இடுப்பில் இருந்து கையை எடுத்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது . கர்நாடகா முழுக்க இந்த வீடியோ இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எடியூராப்பாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர் .

யார் இவர்
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமலதா. இவர் பிரபல நடிகர் அம்பரீஷ் மனைவி. கர்நாடகாவில் இருக்கும் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக நின்று இவர் நாடாளுமன்றத்திற்கு எம்பியாக தேர்வானார். நாடாளுமன்ற தேர்தலில் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications