தண்ணீருக்கு பதிலாக டீசல்.. மங்களூர் கிணற்றில் இரைக்க இரைக்க வந்த எரிபொருள்? கடைசியில் ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள காவூர் என்ற பகுதியில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து டீசல் வருவதாக அப்பகுதி மக்களிடையே பரபரப்பு கிளம்பியது. தண்ணீருடன் இப்படி எண்ணெய் கசிவு வந்ததால், தண்ணீரை குளிக்கவோ, குடிக்கவோ.. ஏன் பாத்திரம் கழுவ கூட முடியாத நிலை ஏற்பட்டது. உண்மையில் தண்ணீரில் டீசல்தான் கலந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் கலந்து இருக்கிறதா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக சில இடங்களில் மக்கள் அல்லல்படும் நிலமை காணப்படுகிறது. காவூர் கிராமத்திலும் தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் நிலையில், அங்குள்ள கிணற்றில் மக்கள் தண்ணீரை தேடி போனால், அங்கு தண்ணீர் முழுவதும் எண்ணெய் படலமாகவும் டீசல் வாசனையும் வந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். ஒரு கிணற்றில் மட்டுமில்லை. மொத்தமாக மூன்று கிணற்றில் இப்படி எண்ணெய் படலங்களுடன் தண்ணீர் வந்ததால் மக்கள் வேதனை அடைதனர்.

கிணற்று நீரில் டீசல்
கடந்த சில தினங்களாகத்தான் தண்ணீரில் மாற்றம் வந்துவிட்டதாக கூறினர். தண்ணீருடன் இப்படி எண்ணெய் கசிவு வந்ததால், தண்ணீரை குளிக்கவோ, குடிக்கவோ.. ஏன் பாத்திரம் கழுவ கூட முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் தீயை பற்ற வைத்தால் உடனடியாக எரிந்தது. இதனால், பூமியில் இருந்து நேரடியாக டீசல் வந்துவிட்டதாக சிலர் பேசியதையும் பார்க்க முடிந்தது.
உண்மையில் பூமிக்கடியில் இருந்து டீசல் நேரடியாக வராது என்ற உண்மை அறியாத பலரும் இப்படி இஷ்டத்திற்கு கதை கட்டி விட்டார்களாம். தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீருடன் டீசல் கலந்து எப்படி என்ற கேள்விக்கு மக்கள் மத்தியில் எழுந்தது. கிணறுகள் இருக்கும் இடத்திற்கு அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் மறுப்பு
இந்த பங்கில் பெட்ரோல், டீசல் சேமித்து வைக்கப்படும் டேங்கில் கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீர் நிலத்தடி நீருடன் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறுகையில், "கிணறுகளை முழுமையாக காலி செய்த பின்னரும் கீழ்ப் பகுதியில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் தொடர்ந்து ஊறி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கலாம்" என்றனர்.
ஆனால், அருகிலுள்ள பெட்ரோல் பங்கின் உரிமையாளர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர். தங்களின் எரிபொருள் டேங்கில் இருந்து எந்த கசிவும் இல்லை என்றும், நிலத்தடி டேங்கில் இருந்து கசிவு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரில் டீசல்தான் கலந்துள்ளதா?
உள்ளூர் மக்கள் புகாரையடுத்து, அப்பகுதிக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தண்ணீரை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர். உண்மையில் தண்ணீரில் டீசல்தான் கலந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் கலந்து இருக்கிறதா? என்று ஆய்வு செய்த பிறகே தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறினர். இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காவூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீருடன் பெட்ரோலிய ரசாயனங்கள் ஏற்கனவே கலந்திருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அப்பகுதியின் மேலும் பல இடங்களில் உள்ள கிணறு நீரும், வரும் நாட்களில் நச்சுத்தன்மை அடையக்கூடும் என்ற கவலையை எழுப்பிய மக்கள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications