இடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார். மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இவரது ராஜினாமா காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில்தான், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், தினேஷ் குண்டுராவ்.

நான் முடிந்த அளவுக்கு எனது சக்திக்கும் மீறி தேர்தல் பணியாற்றினேன். இருந்தும்கூட, காங்கிரஸ் தோற்றுள்ளதால், அதற்கு பொறுப்பேற்று எனது ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன். இதுகுறித்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சியை வலுப்படுத்த முழு கால நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, லோக்சபா தேர்தலின்போதும் காங்கிரஸ் கர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்தது. எனவே அப்போதே தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். இதை காங்கிரஸ் மேலிடம் அப்போது ஏற்கவில்லை. எனவே, இப்போது காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முன்னதாக, தேர்தல் ரிசல்ட் வெளியானதும் இன்று மதியம் நிருபர்களை சந்தித்த, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சித்தராமையா சட்டசபை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் சித்தராமையா இழக்கிறார்.
அடுத்தடுத்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்வது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்











Click it and Unblock the Notifications