Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் படுதோல்வி.. பெங்களூர் ரூரலில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்த பாஜக

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதியில் இரண்டரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனும், பாஜகவின் வேட்பாளருமான மஞ்சுநாத்திடம் தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார். இவர் கர்நாடகா துணை முதல்வராகவும் உள்ளார். இவரது தம்பி டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். 2013 இடைத்தேர்தல், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் டிகே சுரேஷ்.

lok sabha election 2024 dk suresh bangalore rural bangalore bengaluru karnataka 2024

கடந்த 2019ல் கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தேர்தலில்களில் 27 இடங்களில் காங்கிரஸ் தோற்ற நிலையில் டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் களமிறங்கி உள்ார்.

பெங்களூர் புறநகர் தொகுதி என்பது டிகே சுரேஷின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் டாக்டர் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளராகி உள்ள மஞ்சுநாத் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) மருமகன் ஆவார்.

இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வருகிறார். காலை 11 மணி நிலவரப்படி பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சுரேஷ் 2,27,190 ஓட்டுகளை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரான தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் 3,17,589 ஓட்டுகள் பெற்றிருந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான வாக்கு சதவீதம் என்பது 90,399 ஆக இருந்தது. அதாவது டிகே சுரேசை விட மஞ்சுநாத் 90,399 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து டிகே சுரேஷ் பின்தங்கி வந்தார். கடைசியாக பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பியான காங்கிரஸ் வேட்பாளர் டிகே சுரேஷ் தோல்வியடைந்துள்ளார். டிகே சுரேசை 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் வீழ்த்தினார்.
பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 553 வாக்குகளை பெற்றிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் டிகே சுரேஷ் மொத்தம் 8 லட்சத்து 7 ஆயிரத்த 459 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார். கடந்த 2012 இடைத்தேர்தல், 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் பெங்களூர் புறநகரில் வென்ற டிகே சுரேஷ் இந்த முறை தோல்வியடைந்துள்ளார்.

இது கர்நாடகா காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏனென்றால் பாஜகவில் அமித்ஷா எப்படியோ அப்படித்தான் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார். பாஜக பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயன்றபோது டிகே சிவக்குமார் தான் ரெசார்ட்டுகளில் தங்க வைத்து பாதுகாத்துள்ளார். இத்தகைய சூழலில் தான் டிகே சிவக்குமார் வென்று ‛இந்தியா’ கூட்டணி ஆட்சியை பிடித்தால் அவரை மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் சொந்த தொகுதியான பெங்களூர் புறநகரில் அவரது உடன் பிறந்த தம்பி டிகே சுரேஷ் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+