ஒக்கலிகா கவுடாக்கள் 11 பேருக்கு அமைச்சர் பதவி கேட்ட டிகேஎஸ்- ஆடிப்போன சித்து- அடுத்த லிஸ்ட் எப்போ?
பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் அரசில் ஒக்கலிகா கவுடா ஜாதியின் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் வலியுறுத்தியதால் முதல்வர் சித்தராமையா கடும் அதிர்ச்சி அடைந்தார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார், 8 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் சங்மமாக இந்த பதவியேற்பு விழா இருந்தது. என்னதான் பதவியேற்பு விழா முடிவடைந்தாலும் சித்தராமையா, டிகேஎஸ் இடையேயான முட்டல் மோதல் தொடரவே செய்கின்றன. அதனால்தான் அமைச்சரவை பட்டியல் முழுமையாக இறுதி செய்யப்படவும் இல்லை என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

உதாரணமாக சில நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. முதல்வர் சித்தராமையா தரப்பில் பிகே ஹரிபிரசாத், என்.ஏ.ஹரீஷ் ஆகியோர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாம். டிகேஎஸ் தரப்பி, கிருஷ்ண பைரே கவுடா, தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமது கான், எம்பி பாட்டீல், அகமது கான் ஆகியோரை அமைச்சரவையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாம். ஆகையால் உடனடியாக காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அமைச்சரவை பட்டியலை நாங்கள் இறுதி செய்கிறோம் என்றதாம். அதனடிப்படையில்தான் நேற்று அமைச்சரவை பதவியேற்பும் நடந்தததாம்.
இது ஒருபுறம் இருக்க, சித்தராமையா தரப்பைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து தம்முடன் வெளியேறி காங்கிரஸ் இணைந்த சகாக்களுக்கு எப்படியாவது அமைச்சரவையில் இடம் பெற்றுத் தர வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறாராம். ஆனால் டிகே சிவகுமாரோ, காங்கிரஸ் கட்சி சீனியர்களுக்குதான் முதல் முன்னுரிமை என என்கிறாராம்.
குறிப்பாக தமது இமேஜை பலமடங்கு உயர்த்தும் வகையில் வெற்றி வாய்ப்பை அள்ளித் தந்த தாம் சார்ந்த ஒக்கலிகா கவுடா ஜாதியினர் 11 பேரை அமைச்சராக்க வேண்டும் என்கிறாராம் டிகே சிவகுமார். இப்படி ஒரே ஜாதியை சேர்ந்தவர்களை அமைச்சராக்குவதற்கு பதில் பரந்துபட்ட அளவில் மைனாரிட்டி ஜாதியினருக்கும் கூட அமைச்சர் பதவி கொடுத்தால் வாக்கு வங்கிக்கும் உதவும் என்றாராம் சித்தராமையா. கர்நாடகாவில் மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம் பெற முடியும். தற்போது 8 பேர் அமைச்சர்களாகி இருக்கின்றனர். எஞ்சிய பட்டியல், இத்தகைய அக்கப்போர்களுக்கு நடுவே வெளியாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications