Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது அணை கட்ட அனுமதி! உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகம் பணிந்து ஏற்க வேண்டும். டி.கே. சிவகுமார் தடலாடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. நீதிமன்றங்கள் வழக்கு தொடர்ந்தும், ஆணையங்கள் அமைக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கர்நாடகாவின் முதல்கட்ட ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உச்ச நீதிமன்றம் உத்தரவை தமிழ்நாடு பணிந்து ஏற்க வேண்டும் என்று தடாலடியாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே கடந்த 50 வருடங்களுக்கு மேலாக காவிரி நதி நீர் பங்கீட்டில் பஞ்சாயத்து நிலவி வருகிறது. கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நீண்ட வருடங்களாக முயற்சித்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக புகார் உள்ளது.

Mekadatu DK Shivakumar

மேகதாதுவில் அணை

இந்நிலையில் கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி உள்ளிட்டோரும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு, "கர்நாடகாவின் திட்ட அறிக்கையை திரும்ப அனுப்ப வேண்டும்." என்று கூறியிருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கர்நாடகா அரசு அணை கட்டுவது தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும்." என்று தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். இது தமிழ்நாடுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு ஏற்க வேண்டும்

தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் முறையாக வாதிடவில்லை என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் உத்தரவு குறித்து கர்நாடகா துணை முதல்வரும், அந்த மாநில நீர்வளத்துறையை நிர்வகித்து வருபவருமான டி.கே சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேகதாது விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. கர்நாடகா நீர் விவகாரத்தில் எங்களின் உரிமையையும், நியாயமான கோரிக்கையையும் முன் வைத்தோம்.

நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இதன் மூலம் தமிழ்நாடும் பயனடைந்து போதுமான தண்ணீரை பெறுவார்கள். எங்களுடைய பகுதியில், எங்களின் நிதியில் அணை கட்டுவோம். போதுமான மழை இல்லாதபோது தமிழ்நாட்டிற்கு கைக்கொடுப்போம். நதி நீர் பங்கீட்டில் எந்த குறையும் இருக்காது. இந்த தீர்ப்பு பெங்களூர் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த உத்தரவை தமிழ்நாடு பணிந்து ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாதிக்காது

அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்த திட்டத்தால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்காது. மேகதாது அணை திட்டத்தற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளிப்பதை தவிர, அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. அவர்கள் நமக்கு நீதி வழங்கியே ஆக வேண்டும். எங்கள் எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டத்தை நிறைவேற்றுவோம்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+