கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு- சித்தராமையா ராஜினாமா செய்யமாட்டார்..'இலவு காத்த கிளி'யான டிகே சிவகுமார்
பெங்களூர்: முடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்புக்காக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்யமாட்டார் என துணை முதல்வரும் முதல்வர் பதவியை நோக்கி இலவு காத்த கிளியாக காத்திருப்பவருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா, சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. சித்தராமையாவின் மனைவி நிலத்தை முடா ஆக்கிரமித்தது; இதற்கு நட்ட ஈடாகவே 14 வீட்டு மனைகளை முடா ஒதுக்கியது எனவும் கூறப்படுகிறது.

ஆனால் முடாவின் வீட்டு மனை ஒதுக்கீடு சட்டவிரோதமானது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சித்தராமையா மீது வழக்கு தொடரவும் சமூக ஆர்வலர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் ஆளுநர் கொடுத்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தது செல்லும் எனத் தீர்ப்பளித்து சித்தராமையா மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார், துணை முதல்வர் டிகே சிவகுமார் புதிய முதல்வராகக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியிருப்பதாவது: சித்தராமையாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருகிறது. முடா ஒதுக்கீட்டில் சித்தராமையா மீது தவறு இல்லை. வழக்கு விசாரணையில் உண்மை வெளியே வரத்தான் போகிறது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. ஆனால் சித்தராமையா இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக இப்படித்தான் பாஜக சதி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவருமே சித்தராமையா பக்கமே நிற்கிறோம். அவருக்கு ஆதரவாகவே காங்கிரஸ் நிற்கிறது. அன்று என்னை கூட சிறைக்கு அனுப்பியதும் பாஜகதான். அதே யுக்தியைத்தான் இப்போதும் பாஜக கையாள்கிறது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications