‛இனி எல்லாம் சுகமே’.. நிலவில் இருந்து வந்த குட்நியூஸ்.. ரோவர் எவ்வளவு தொலைவை கடந்துள்ளது தெரியுமா?
பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆய்வை தொடங்கி உள்ள நிலையில் தற்போது அது எவ்வளவு தூரத்தை கடந்துள்ளது என்பது பற்றி இஸ்ரோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது. இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் 3 என்பது உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றுடன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து புவிவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டாபாதையில் உந்துவிசை கலன் நுழைந்தது.
இதையடுத்து உந்து விசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு சந்திரயான் - 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரின் வேகம் என்பது படிப்படியாக குறைக்கப்பட்டது நிலவில் தரையிறங்குவதற்கான செயல்முறை தொடங்கியது. அதன்படி கடந்த 23ம் தேதி திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன்மூலம் நிலவில் தடம்பதித்த நாடு என்ற பெயரை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு இந்தியா பெற்றது. அதோடு நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெயரையும் இந்தியா பெற்றது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து 4 மணிநேரம் கழித்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. விக்ரம் லேண்டரின் வயிற்றுப்பகுதியில் இருந்து சாய்வுதளம் மூலம் பிரக்யான் ரோவர் நிலவில் கால்பதித்தது.
ரோவர் என்பது 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்களும். இதில் எல்ஐபிஎஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் எனும் ஆய்வுக்கருவிகள் உள்ளன. இதில் ஏபிஎக்ஸ்எஸ் என்பது ஆல்பா பார்ட்டிகிள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டராகும். இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் கலவை எப்படிப்பட்டது என்பதை கண்டறியும் ஆய்வை மேற்கொள்ளும். எல்ஐபிஎஸ் என்பது லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் என அழைக்கப்படும். லேசர் ஆய்வை செய்யும்.
இந்நிலையில் தான் ரோவர் ஆய்வு பணியை தொடங்கியது. அதன்படி தற்போது வரை பிரக்யான் ரோவர் நிலவில் 8 மீட்டர் தொலைவை கடந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ரோவர் செயல்பாடு சரிபார்க்கப்பட்டன. அதன்படி ரோவர் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் கருவிகள் சரியாக செயல்படுகின்றன. அதேபோல் உந்துவிசை கலன் மற்றும் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டு வருகின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோவர் என்பது ஒரு வினாடிக்கு ஒரு சென்டி மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து செல்லும். அந்த வகையில் தற்போது 8 மீட்டர் தொலைவை அது கடந்துள்ளது. இந்த ரோவர் மொத்தம் 26 கிலோ எடை கொண்டது. மொத்தம் 6 வாகனங்களுடன் இது இயங்கும். ரோவர் மொத்தம் 14 நாட்கள் ஆய்வு செய்கிறது. மேலும் பிரக்யான் ரோவரில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் உள்ளன. மேலும் அதற்கு தேவையான ஆற்றலை பெறும் வகையில் 50 வாட் மின்சாரத்தை உருவாக்கும் வகையில் சோலார் பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்யும் இந்த பிரக்யான் ரோவர் என்பது நேரடியாக அதன் அருகே இருக்கும் விக்ரம் லேண்டருடன் தொடர்பில் இருக்கும். அதாவது பிரக்யான் ரோவர் நிலவின் ஆய்வு தொடர்பான தகவல்களை விக்ரம் லேண்டருக்கு அனுப்பும். இநு்த விக்ரம் லேண்டர், ஆர்ப்பிட்டர் மூலம் இஸ்ரோவுக்கு தகவல்களை வழங்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications