பெங்களூர் ராமேஸ்வரம் கபேவின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஓனர் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஓட்டலின் ஒரு மாத வருமானம் ரூ.4.5 கோடி என்கிறார்கள். ஒரு நாள் வருமானம் என்பது பல லட்சமாக இருக்கிறது.. பெங்களூர் மக்களிடையே குறைந்த காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த ஓட்டலில் தான் நேற்று குண்டு வெடித்தது.

கர்நாடகா தலைநகர் பெங்களூர் நகரில் மிகவும் பிரபலமான உணவகமாக 'ராமேஸ்வரம் கபே' கடை இருக்கிறது. திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் திவ்யா, ஐஐஎம் அகமதபாத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். ராகவேந்திரா 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டரிங் துறையில் பணியாற்றியவர்.

Do you know how much is the daily income of Bangalore Rameswaram Cafe Do you know who the owner is

இந்நிலையில் திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி பெங்களூர் சேஷாத்ரிபுரத்தில் உணவு வண்டியில் தோசை மற்றும் இட்லிகளை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள். உணவுகளின் சுவை மற்றும் தரம் அருமையாக இருந்த காரணத்தால் கடைக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதையடுத்த சிறியதாக 2021ல் இரண்டு கடையை ஆரம்பித்தார்கள்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை இணைத்து 'ராமேஸ்வரம் கபே' என்ற பெயரில் இந்த ஓட்டல் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டல் பெங்களூர் நகரை தாண்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் திறக்கப்பட்டுள்ளது. 10க்கும் 10 என்கிற சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட 'ராமேஸ்வரம் கபே' இன்று பெங்களூர் நகர் மக்களால் அதிகம் விரும்பப்படும் கடையாக உள்ளது.

தென்னிந்திய பாரம்பரிய உணவுகளையே விநியோகிக்கும் 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் காலை உணவாக நெய் பொடி இட்லி மற்றும் மசாலா தோசை உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் விற்கப்படுகிறது. இந்த ஓட்டலில் சுவை மற்றும் தரம் காரணமாக விரைவிலேயே புகழ் பெற தொடங்கியது.. காபி, தோசை, இட்லி, சாம்பாருக்கு புகழ் பெற தொடங்கியது. பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியதால் வெளியே தெரிய ஆரம்பித்தது.

இந்த நிறுவனத்தின் மாத வருமானம் குறித்து நெட்டிசன் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவலில், ஒவ்வொரு மாதமும் ரூ.4.5 கோடி வருமானமும், ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறியிருந்தார்.. இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சாப்ட்வேர் கம்பெனிக்கு பதில் பெங்களூரில் சாப்பாட்டு கடை ஆரம்பிக்கலாம் போல என்று அப்போது பலரும் பேசினார்கள்.

பெங்களூர் நகரில் வேகமாக வளர்ந்த ராமேஸ்வரம் கபேவில் திடீரென நேற்று குண்டுவெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். இதனால் அந்த உணவகம் தற்போது தலைப்பு செய்திகளில் வந்துள்ளது. பிரபலமான உணவகங்களில் குண்டு வெடிப்பது என்பது இந்தியாவில் ஏற்கனவே நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான கோகுல் சாட் உணவகத்தில், கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 32 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அடுத்த 5 நிமிடத்திலேயே ஹைதராபாத் தலைமைச்செயலகம் அருகேயுள்ள, லும்பினி பார்க் திறந்தவெளித் திரையரங்கத்தில் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+