சொத்துக் குவிப்பு வழக்கு! ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த நகைகளின் மதிப்பு என்ன தெரியுமா?
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கூடாது என பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த நகைகளின் மதிப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது.
1991 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவியேற்றுள்ளார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு முதல் முறையாக 1991 -ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.

அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் 2001 ஆம் ஆண்டும் 2011 ஆம் ஆண்டும் இரு முறை அவர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் அவருடைய பதவி பறிக்கப்பட்டு மேல்முறையீடுகளில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் முதல்வர் பதவியை ஜெயலலிதா ஏற்றார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
இதன் முடிவில் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் பல கோடி மதிப்பிலான 14 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் தங்கம், வைரம், மரகதம், முத்து, ரத்தினம் உள்ளிட்ட கற்களால் ஆன 468 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனுடன் 11,344 புடவைகளும் 750 காலணிகளும் 250 சால்வைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அது போல் 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 91 வாட்ச்கள், 27 வால் கிளாக், 86 ஃபேன்கள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 31 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார விளக்குகள், 20 சோஃபாக்கள், 215 அழகிய வேலைபாடு கொண்ட கண்ணாடிகளும் கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூர் நீதிமன்றம் நடத்தியது. இதனால் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு அந்த பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் நகை உள்ளிட்டவைகளை ஏலம் விட வழக்கறிஞரை கர்நாடகா அரசு நியமித்தது. இந்த நிலையில் நகை உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்தார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் நகைகளை ஏலமிடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என பெங்களூர் நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக தமிழ்நாடு அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை நடத்தியதற்காக ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 5 கோடிக்கான வரைவோலையை கர்நாடக அரசுக்கு செலுத்த எஸ்பிஐ வங்கியின் சென்னை கிளை தலைமை மேலாளருக்கு உத்தரவிடப்பட்டது. எனவே ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழகத்திற்கு வரலாம் என தெரிகிறது. அது போல் அந்த பொருட்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என தெரிகிறது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications