பெங்களூர் மாணவி ஓடும் ரயிலில் பெற்றோரிடம் செல்போனில் பேசிய வார்த்தை.. அடுத்த நொடியே ஆடிப்போன பயணிகள்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கலபுரகியைச் சேர்ந்த தனுஜா என்ற 23 வயது பெண், பெங்களூரில் அறை எடுத்து தங்கியிருந்து டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு படித்து வந்துள்ளார். இரண்டு முறை நுழைவுத்தேர்வு எழுதிய மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவே இல்லை.. அவரது கனவு நிறைவேறாமல் போனதால், ரயிலில் ஏறி சொந்த ஊருக்கு போனார். போகும் வழியில் அவர் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
டாக்டராக ஆசைப்படும் யாராக இருந்தாலும், 12ம் வகுப்பு படித்துவிட்டு நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவரவர் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர முடியும். தேர்ச்சி பெற்றாலும் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே அரசு கல்லூரிகளில் சேர முடியும். மற்றவர்களுக்கு இடம் கிடைக்காது. இதுதான் நடைமுறை எதார்த்தம் ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று இட ஒதுக்கீடு இருக்கிறது.

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு என்று உள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டாக்டராக முடிகிறது. அதேநேரம் மற்ற மாநிலங்களில் வேறுவிதமாக இடஒதுக்கீடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக எம்பிபிஎஸ் படிக்க நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இதில் தேர்ச்சி பெற முடியாத மாணவ, மாணவிகள், மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவெடுக்கிறார்கள்.. அப்படித்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்த 23 வயதாகும் தனுஜா என்ற மாணவிக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. இதற்காக மாணவி தனுஜா, பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்து படித்து வந்துள்ளார். டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதியிருக்கிறார். ஆனால் 2 முறையும் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுத்தார். இதனால் இருமுறையும் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காமல் அவரது டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாமல் போயிருக்கிறது.
இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி தனுஜா விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில், தனுஜா நேற்று பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான கர்நாடகா மாநிலம் கலபுரகிக்கு ரயிலில் சென்றார். அந்த ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தனுஜா, தனது பெற்றோரிடம் செல்போனில் அழைத்து பேசியிருக்கிறார்
அப்போது, டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் உயிரை விடப் போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீருடன் கிளம்பி வந்து மாணவியிடன் உடலை பெற்று சென்றனர்.இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications