"முதலிரவு" என்றால் என்ன.. மாணவிகளுக்கு வீடியோ மூலம் விளக்கிய ஆசிரியர்.. ஸ்பாட்டுக்கு வந்த ஆபீசர்
ஆபாசமாக மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரு பள்ளி ஆசிரியரை, பொதுமக்களும், பெற்றோர்களும் திரண்டு வந்து தாக்கி இருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மாணவ - மாணவிகளும் மீளவில்லை.
கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. தும்கூர் அருகே சிக்கசாரங்கி அருகே ஒரு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது..
இந்த பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் பெயர் கந்தலஷ்மா.. இவர் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டுதான் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவாராம்.. மதுபோதையில் அந்த ஸ்கூலில் உள்ள, மற்ற டீச்சர்களுடன் சண்டை போடுவாராம்..

கிளாஸ்ரூம்
இந்த புகார் பற்றி பலமுறை சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.. இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள், ஆத்திரமடைந்து ஒருநாள் அந்த டீச்சரை சுற்றி வளைத்து விட்டனர்.. அதுவும், போதையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.. அந்த பள்ளிக்கு பூட்டுப் போட்டு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பள்ளிக்கல்வி அலுவலர் நேரடியாக வந்துவிட்டார்.. டீச்சரின் அந்த கிளாஸ்ரூமை ஆய்வு செய்தார்..

அசிங்கம் திட்டு
அங்கிருந்த டேபிள் டிராயரை திறந்து பார்த்தபோது, ஏகப்பட்ட மதுபாட்டில்களை டீச்சர் அங்கு வைத்திருந்ததை பார்த்து ஆபீசரே ஆடிப்போய்விட்டார்.. இந்த தொடக்கப் பள்ளியில், கடந்த 25 வருடங்களாக, இந்த டீச்சர் வேலை பார்த்து வருகிறாராம்.. இவருக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்து வந்தால், இப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக சொல்கிறார்கள்.. சக டீச்சர்கள் யாராவது அறிவுரை சொல்ல போனால், அவர்களை அசிங்க அசிங்கமாக திட்டி விடுவாராம். நமக்கெதுக்கு வம்பு என்று அவர்கள் ஒதுங்கி சென்றுள்ளனர்.. அதே போல, கிளாஸ் பிள்ளைகளையும் இவர் திட்டியதால்தான், அவர்கள் தங்கள் பெற்றோரிடம் விஷயத்தை கொண்டு சென்றுள்ளனர்.. அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் நேரடி விசாரணை நடத்தி, தவறுகள் உறுதியதானதையடுத்து இந்த டீச்சரை, சஸ்பெண்ட் செய்தார்கள்.

முதலிரவு
இந்த சம்பவம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.. இன்னொரு ஆசிரியர் அதே கர்நாடக மாநிலத்தில் சிக்க உள்ளார்.. கோலார் மாவட்டம் கோலார் தாலுகா நரசாபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது... இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரகாஷ்... இவர் 2 நாளைக்கு முன்பு, தன்னுடைய கிளாஸ்ரூமில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.. அப்போது, முதலிரவு என்றால் என்ன? என்று மாணவ-மாணவிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். பிறகு ஹனிமூன் என்றால் என்ன? என்று கேட்டு, தாம்பத்தியம் குறித்து பேசியுள்ளார். இதைதவிர, மாணவ-மாணவிகளுக்கு ஆபாச படங்களையும் காண்பித்ததாக கூறப்படுகிறது.

ஹனி மூன்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள், தங்களின் பெற்றோர்களிடம் சொல்லி உள்ளார்கள்.. அவர்கள் இதற்கு மேல் ஆத்திரம் அடைந்து நேரடியாகவே கிளம்பி ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள்.. நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி மக்களும் திரண்டு பள்ளிக்கு வந்தனர்.. ஆசிரியர் பிரகாசிற்கு மொத்தமாக சேர்ந்து தர்மஅடி தந்தனர்.. பிறகு, ஆசிரியரின் இந்த கேவலமான செயல் குறித்து கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவிடம் புகார் அளித்தனர்.

கிழியும் சீட்
அதன்பேரில், கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவும், நேரடியாக ஸ்கூலுக்கு வந்து, மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது கிளாஸ்ரூமில், பிரகாஷின் செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவிகளே கண்ணய்யாவிடம் சொன்னார்கள்.. இறுதியில், அவர் இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனருக்கு தகவல் கொடுக்கவும், அவரின் அனுமதியின் பேரில் வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யா, ஆசிரியர் பிரகாஷை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டிரான்ஸ்பர்
ஆனால், எவ்வளவு பெரிய தவறையே செய்திருந்தாலும், சஸ்பெண்ட் ஒன்றுதான் தண்டனையா? என தெரியவில்லை.. இந்த "சஸ்பெண்ட் நடவடிக்கை" என்பது எந்தவகையில், இதுபோன்ற குற்றவாளிகளை மாற்றும்? ஒரு இடத்தில் தவறு செய்துவிட்டால், டிரான்ஸ்பர் என்றால், அவர் இன்னொரு இடத்திலும் இதே தவறைதானே செய்வார்? இடம்தான் மாறுபடுமே தவிர, புத்தி கிடையாது.. எனவே டிரான்ஸ்பர் என்பதுடன் மட்டுமே தண்டனையை சுருக்கி கொள்ளாமல், துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.. பிள்ளைகளுக்கு, இதுபோன்றவர்கள் பாடம் நடத்தும் தகுதியே கிடையாது.. அந்தவகையில், இவர்களின் வேலையும் பறிக்கப்பட வேண்டும். ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், படிக்கும் பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது?!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications