கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெண்.. பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மணந்த பெண் யார் தெரியுமா? சீர்காழி பெண்ணா!
பெங்களூர்: பாஜகவை சேர்ந்த பெங்களூரு தெற்கு எம்.பி.யான தேஜஸ்வி சூர்யாவிற்கு 4 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த நான்கு நாட்களாக இவரின் மனைவி யார்.. தேஜஸ்வி சூர்யாவிற்கும் யாருக்கும் திருமணம் நடந்தது என்பதுதான் நெட்டிசன்கள் பலரின் தேடலாக உள்ளது.
கடந்த 1 வாரத்தில் கூகுள் சர்ச்சில் அதிகம் இடம் பிடித்த பெயர்களில் ஒன்றாக இவரின் மனைவி பெயர் அமைந்து உள்ளது. சரி யார்தான் தேஜஸ்வி சூர்யாவின் மனைவி?

தேஜஸ்வி சூர்யாவின் மனைவி
கர்நாடக இசைப் பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் என்பவரை மார்ச் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் தேஜஸ்வி சூர்யா. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். எதிரிகட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் சார்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் கலந்து கொண்டனர்.
பாஜக சார்பாக அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது திருமணம் நடந்தாலும் ஜனவரிலேயே நிச்சயம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராக சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் மாறிவிட்டார்.
சென்னையைச் சேர்ந்த இவர் நடன கலைஞர் ஆவார். சீர்காழிதான் சொந்த ஊர். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலைகளில் தனது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர். ஆகஸ்ட் 1, 1996 அன்று பிறந்த இவர், மிருதங்க மேஸ்ட்ரோ சீர்காழி ஸ்ரீ ஜே ஸ்கந்தபிரசாத்தின் மகள் ஆவார்.
பிரபலமான நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் .அவரது பாட்டி சாந்தி ஜெயராமன், பரதநாட்டியக் கலைஞர்களுக்கு நன்கு அறியப்பட்ட பாடகி ஆவார்.
அவரது தந்தைவழி தாத்தா கலைமாமணி மறைந்த சீர்காழி ஆர். ஜெயராமன் பிரபல இசைக்கலைஞராவார். ஆச்சார்யா சூடாமணி குரு ஸ்ரீமதி ரோஜா கண்ணன் மற்றும் கலைமாமணி ஸ்ரீமதி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 3 வயதில் இருந்தே பரதநாட்டியம் ஆடி வருகிறார் . கூடுதலாக, பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்காக சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு பாடலைப் பாடினார். ஹில்ஹெ நீனு என்ற இந்த படத்தில் வரும் கன்னட வெர்ஷன் பாடலை இவர் பாடி உள்ளார். தமிழில் இது "காதோடு சொல்" பாடல் ஆகும்.
டிரெண்டிங்
இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராக சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் மாறிவிட்டார்.
28 வயதான இவர், பாரம்பரிய இந்திய கலை வடிவங்களை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான அஹுதியின் நிறுவனர் ஆவார். பாரம்பரிய இந்திய கலை வடிவங்களுக்கும் நவீன பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் பல முன்னெடுப்புகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ-இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டமும், ஆயுர்வேத அழகுசாதனத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications