மீனை போல துடிதுடித்த மகள்.. ஆட்டோவில் யார் பாருங்க.. ஒரே நொடியில் மாணவியின் "தரமான" சம்பவம்.. சபாஷ்
பெங்களூர்: மங்களூரு அருகே நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பலருக்கும் ஆச்சரியத்தையும், சிலிர்ப்பையும் உண்டுபண்ணி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ளது ராஜரத்னபுரா என்ற பகுதி.. இங்கு சேத்னா என்ற பெண் வசித்து வருகிறார்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவரது மகள் வைபவிக்கு 14 வயதாகிறது..

அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறாள். பள்ளி முடிந்ததுமே மாலை நேரத்தில், கின்னிகோலி பகுதியில் டியூஷனும் படித்து வருகிறார் வைபவி.
பிசியான சாலை: மாலையில் டியூஷன் முடிந்ததும், சேத்னா டியூஷனுக்கு சென்று, மகளை வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாகும். காரணம், பிசியான சாலையை கடந்துதான் டியூஷன் செல்ல வேண்டும் என்பதால், சேத்னா இவ்வாறு மகளை அழைத்து செல்வதும், பிறகு டியூஷன் முடிந்து வீட்டுக்கு அழைத்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
சம்பவத்தன்றும், தன்னுடைய வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, டியூஷனிலிருந்து மகளை அழைத்து வர கிளம்பி சென்றார் சேத்னா.. அப்போது சாலையில் மற்றொருபுறம் மகள் வைபவி நிற்பதை கண்டார் சேத்னா. மகளை பார்த்ததுமே பதற்றத்தில் வேக வேகமாக சாலையை கடக்க முயன்றார் சேத்னா. அப்போது மின்னல் வேகத்தில் ஆட்களுடன் ஆட்டோ வந்துகொண்டிருந்தது. திடீரென சேத்னா குறுக்கே வருவதை பார்த்ததுமே, ஆட்டோ டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க வண்டியில் பிரேக் போட்டார்.
ஆட்டோ கவிழ்ந்தது: ஆனால், அசுர வேகத்தில் வந்ததால், ஆட்டோ அப்படியே சேத்னா மீது கவிழ்ந்து, பல அடி தூரத்துக்கு இழுத்துக்கொண்டு போனது.. இதைப்பார்த்துமே, சாலையின் மறுமுனையிலிருந்த வைபவி, பதறியடித்து, கதறியபடியே ஓடிவந்தாள்..
தன்னுடைய அம்மா மீது ஆட்டோ மொத்தமாக சாய்ந்து கிடப்பதை பார்த்ததுமே, அலறி துடித்தாள்.. ஆனால், ஒரு செகண்டுகூட தாமதிக்காமல், தன்னந்தனி நபராகவே, அந்த ஆட்டோவை அப்படியே தூக்கி நிறுத்தி, தன்னுடைய அம்மாவை காப்பாற்றினாள்.
சிகிச்சை: ஆட்டோவை தூக்கியபோது, அதற்குள் இருந்தவர்கள் சிலர் காயங்கள் அடைந்தனர்.. பீதியிலும் பயத்திலும், அங்கிருந்து எழுந்த சிலர் தப்பித்து ஓடினார்கள்.. எனினும் அங்கிருந்தவர்கள் ஒன்றுசேர்ந்து படுகாயமடைந்த சேத்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சேத்னாவுக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
14 வயது மாணவி, தன் கண்ணெதிரே அம்மா மீது ஆட்டோ விழுந்துவிடவும், எதைப்பற்றியும் யோசிக்காமல், பயப்படாமல், தீரத்துடன் செயல்பட்டு ஆட்டோவை தூக்கி நிறுத்தி, அம்மாவை காப்பாற்றிய செயல், அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தன் அம்மாவை மட்டுமல்லாமல், ஆட்டோவில் வந்தவர்களையும் காப்பாற்றிய மாணவிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications