காதலியை மடி மீது உட்கார வைத்த இளைஞர்.. கரெக்ட்டா வந்த போலீஸ்! பெங்களூர் ஏர்போர்ட் ரோட்டில் பரபரப்பு
பெங்களூர்: பெங்களூர் ஏர்போர்ட் ரோட்டில் நடந்த இந்த சம்பவம், இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.
நாளுக்கு நாள் சில காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள் பொதுவெளியிலேயே பலரையும் முகம் சுளிக்க வைத்துவிடுகின்றன.. அதேசமயம், இவர்களின் அட்டகாசங்களும், அத்துமீறல்களும், ஆபாசங்களும் எல்லைமீறி போய் கொண்டிருக்கின்றன..

அசிங்கம்: ஒதுக்குப்புறத்தில், மறைவிடத்தில் மட்டுமே தென்பட்டு கொண்டிருந்த இப்படிப்பட்ட அசிங்கங்கள், வெளிப்படையாகவே தற்போது அதிகரித்துவிட்டது.. அதிலும் பைக்குகளில் செல்லும் காதல் ஜோடிகளின் அக்கிரமத்துக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூருவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தது.. குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் இந்த ஜோடி சென்று கொண்டிருந்தது.. அப்போது, பைக்கின் பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பெண், திடீரென பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார். அதுவும், காதலனை நோக்கி திரும்பி உட்கார்ந்து, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே சென்றுள்ளார்.
காதலன்: காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துக் கொண்டே போகவும், இதை ரோட்டில் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. உடனே இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. அதற்கு பிறகு போலீசாரின் பார்வைக்கு இந்த வீடியோ சென்றதுமே, அடுத்த தினமே அந்த இளைஞரின் வீட்டுக்கே சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதோ இப்போதும், பெங்களூரு மெயின் ரோட்டில் ஒரு அட்டகாசம் நடந்துள்ளது.. பெங்களூரு ஏர்போர்ட்டி ரோட்டில் விபத்துகளை தடுப்பதற்காக, வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்க்ள.
மேம்பாலம்: இந்த நிலையில், விமான நிலைய ரோட்டில், எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு இளம் காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. அதாவது, அந்த இளைஞர், தன்னுடைய காதலியை மடியில் உட்கார வைத்துக் கொண்டே, பைக்கை ஓட்டி சென்றுள்ளார்..
முதலில் அந்த பெட்ரோல் டேங்க் மீதுதான் உட்கார்ந்திருக்கிறார். ஆனால், இந்த காதலனின், அந்த பெண்ணை, தன்னுடைய தொடை மீது ஏறி உட்கார வைத்து, அவரை கட்டியணைத்தப்படியே பைக்கை ஓட்டியிருக்கிறார். அதுவும் 2 பேருமே ஹெல்மெட் போடாமல் இருந்திருக்கிறார்கள்.
வீடியோ : இதனை, பைக்குக்கு பின்னாடி வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடவும், இதை பார்த்த பலரும் ஆடிப்போய்விட்டார்கள்..
இந்த வீடியோ காட்சியும், எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதையடுத்து, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளன்ர.. அந்த இளைஞர் பெயர் சிலம்பரசன்.. 21 வயதாகிறது.. சாம்புரா எம்.வி. லே-அவுட்டை சேர்ந்தவராம்.. வாடகை கார் ஓட்டிவருகிறாராம்... இப்போது சிலம்பரசனின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்துவிட்டார்களாம்..!!












Click it and Unblock the Notifications