நெற்றியில் பொசுக்னு குங்குமம் வெச்சிட்டாரே? ஓஹோ அந்த அமைச்சரா? யாரிந்த பெண் பிரபலம்? பாஜக பார்க்குதே
பெங்களூரு: கர்நாடகா அமைச்சரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, நேற்று முதல் பரபரப்பை தந்து வருகிறது.. என்ன காரணம்? யாரிந்த பெண் சவீதா?
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது... இங்கு சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எச்.சி.மகாதேவப்பா... இவருடைய மகன் சுனில் போஸ்... தற்போது சாம்ராஜ் நகர் தொகுதியில் எம்பியாக உள்ளார்...

தரிசனம்: இந்த நிலையில், தற்போது ஆடி மாதம் நடந்து வருவதால், மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு சுனில் போஸ் சென்றிருந்தார்.. அவருடன் சுற்றுலா துறை துணை இயக்குநரான சவிதா என்பவரும் கோயிலுக்கு வந்திருந்தார். இருவருமே சிறப்பு தரிசனம் செய்தார்கள்.. இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்தனர்.
தரிசனத்தை முடித்துக்கொண்டு வரும்போது, திடீரென அந்த பெண் அதிகாரியின் நெற்றியில் சுனில் போஸ் குங்குமப்பொட்டு வைத்ததாக தெரிகிறது. அதுவும் தன்னுடைய ஆதரவாளர்கள் முன்னிலையிலேயே அந்த பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார் சுனில் போஸ்.
வீடியோ: இது தொடர்பான வீடியோ போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி நேற்று முதல் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.. வீடியோவை பார்த்த பலரும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.. காரணம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தார் சுனில் போஸ்..
ஆனால், இதனை அப்போதே பாஜகவினர் மறுத்திருந்தனர். சுனில் போஸுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகவிட்டதாக சொல்லி, சவிதாவுடன் சுனில் போஸ் இருக்கும் போட்டோவை, தேர்தல் அதிகாரியிடம் ஆதாரமாகவும் தந்திருந்தனர்.
சவீதா: எனினும் பாஜகவினரின் புகாருக்கு சுனில் போஸ் மறுப்பு கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், அதிகாரி சவீதாவுக்கு குங்குமப்பொட்டு வைத்துள்ளது மீண்டும் பரபரப்பை தந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சுனில் போஸின் அப்பா எச்.சி.மகாதேவப்பா சொல்லும்போது, "என் மகன், அந்த பெண் அதிகாரியின் முகத்தில் குங்குமம் வைத்ததில் தப்பு எதுவுமில்லை. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் குங்குமம் வைக்கலாமே? இந்து பாரம்பரியத்தில் சமத்துவம் உள்ளது... பிரமாண பத்திரத்தில் எனது மகனுக்கு திருமணமானதா, இல்லையா என்பதை சரிபார்க்கவும்... தேர்தல் மனு ஏற்கப்பட்டுதான், சட்டப்படி எல்லாம் நடக்கிறது" என்று கூறியிருக்கிறார்..
வீடியோ பரபர: எனினும், கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோவின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. மகாதேவப்பா சொல்வது போலவே எடுத்துக் கொண்டாலும் குங்குமத்தை சாதாரணமாக நெற்றியில் வைத்திருக்கலாமே? தலைக்கு பின்னால் கையை கொண்டு வந்துதான் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டுமா? மணப்பெண்ணுக்கு தானே இந்த முறையில் குங்குமம் வைப்பார்கள்? என்றெல்லாம் சந்தேகத்தை கிளப்பி கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications