மிளகாய் தோட்டத்தில் 2 பிரபல நடிகைகள்.. விவசாயி செய்த காரியம்.. வியந்து பார்த்த கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பொதுவாக நெல் வயல்கள், வாழை மற்றும் காய்கறித் தோட்டங்களில் அதிகளவில் மகசூல் கிடைக்கும்போது காண்போரின் கண் திருஷ்டி விழுந்து பயிர்கள் கருகிவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் பல வழிகளைக் கையாள்வர். ஆனால் கர்நாடகாவில் மிளகாய் தோட்டத்தை காப்பாற்ற விவசாயிகள் கையாளும் விநோத யுக்தி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

விவசாய தோட்டங்களில் செழித்து வளரும் பயிர்களுக்குக் கண் திருஷ்டி படாமல் இருக்க, சோளக்கொல்லை பொம்மைகள் மற்றும் கருப்பு மை பூசிய பானைகளை வைப்பது காலம் தொட்டே வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும்.

Karnataka Rachita Ram Evil Eye

விவசாய தோட்டங்கள்

அதாவது, காய்ந்த வைக்கோல் பொம்மைகளுக்கு சட்டை மாட்டி வைப்பது, தேய்ந்துபோன பழைய செருப்புகளை தொங்கவிடுவது, வெள்ளை புள்ளிகள் வைத்த கருப்பு மண்பானைகளை நடுவது போன்ற பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன.

ஆனால், கர்நாடக பகுதி விவசாயிகள் மக்காச்சோளம், புடலங்காய், தர்பூசணி போன்ற காய்கறி பயிர்களுக்கு திருஷ்டி கழிக்க, பிரபல ஹீரோயின்களை போட்டோக்களை தோட்டங்களில் தொங்கவிடுவதை ஒரு வழக்கமான யுக்தியாகவே மாற்றி வருகின்றனர்.

சிவானந்த் விவசாயி

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முன்குந்த் கிராமத்தை சேர்ந்த சிவானந்த் என்ற விவசாயி தனது மிளகாய் தோட்டத்தில் பிரபல முன்னணி நடிகைகளின் போட்டோக்களை தொங்கவிட்டு முற்றிலும் மாறுபட்ட முறையைக் கையாண்டுள்ளார்.

சிவானந்த்தின் தோட்டத்தில் மிளகாய் செடிகள் செழித்து வளர்ந்து, கொத்துக் கொத்தாக மிளகாய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இதனால் அந்த வழியே செல்பவர்களின் பார்வை மிளகாய்களின் மீது பட்டு திருஷ்டி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு மூங்கில் கம்புகளை நட்டு, அதில் கன்னட மற்றும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரச்சிதா ராம் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் போட்டோக்களை தொங்கவிட்டுள்ளார்.

மிளகாய் தோட்டத்தில் 2 நடிகைகள் போட்டோ

இதுகுறித்து விவசாயி சிவானந்த் சொல்லும்போது, "தோட்டத்தை கடந்து செல்லும் யாரும் செடிகளில் உள்ள மிளகாய்களைப் பார்க்க மாட்டார்கள் அவர்களின் பார்வையும், மொத்த கவனமும் முதலில் நடிகைகளின் போட்டோக்கள் மீதுதான் விழும். இதனால் பயிர்களுக்கும் கண் திருஷ்டி விழாது என்கிறார்.

ஆனால் தோட்டத்தில் இடம்பெற்றுள்ள 2 நடிகைகளுமே கர்நாடக மக்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்கள் ஆவர். முக்கியமாக சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரச்சிதா ராம் ஆவார்.

வியந்த கர்நாடகா

மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பலம் கொண்ட இவரது பிறந்தநாள் விழா சமீபத்தில்கூட பிரம்மாண்டமாக நடந்தது.. அதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆளுயர கட்-அவுட்டுகள் வைத்துத் திருவிழா போலக் கொண்டாடியதும், அப்போது ரசிகர் ஒருவர் நெகிழ்ச்சியில் ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளியதும் இணையத்திலும் வைரலானது நினைவிருக்கலாம்.

மொத்தத்தில் சிவானந்த் கடைப்பிடித்து வரும் இந்த விநோத யோசனை அப்பகுதி விவசாயிகள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+