ஹோட்டலில் கூட தண்ணீர் இல்லை.. பெங்களூரில் தண்ணீர் பஞ்சத்தின் கோர முகம்.. ஷாக்
பெங்களூர்: பெங்களூர் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தடை விதித்துள்ளது. விதிமீறல்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெங்களூர் நகரின் பல பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதால், கணிசமான தண்ணீர் பற்றாக்குறையுடன் மொத்த நகரும் சிக்கித் தவிக்கிறது. குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்கு தனியார் டேங்கர்களை நம்பியிருக்கும் குடியிருப்பாளர்கள் தண்ணீர் இன்றி கடுமையாக கஷ்டப்பட தொடங்கி உள்ளனர்.

மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..
பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.
பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.
தனியார் டேங்கர்கள் இதனால் தண்ணீர் விலையை இருமடங்காக விலை உயர்த்தியுள்ளனர். 1,500 ரூபாய் என்று டேங்கருக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில், தனியார் லாரிகளுக்கு, 6,000 ரூபாய் செலவு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இது வெறும் 700 ரூபாயாக இருந்தது. அங்கே இன்னும் கோடை காலமே தொடங்கவில்லை. அதற்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லை: இந்த நிலையில்தான் பெங்களூரில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக அங்கே இருக்கும் மக்களுக்கு குடிக்க, குளிக்க கூட தண்ணீர் இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர் நகரின் பல பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள், அவை பெரும்பாலும் தண்ணீர் பஞ்சம் காரணமாக மிக அதிகப்படியான தொகையை வசூலிக்கின்றன.
கட்டுப்பாடு: பெங்களூர் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தடை விதித்துள்ளது. விதிமீறல்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கோடை காலம் இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூர் திண்டாட தொடங்கி உள்ளது. பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது/ ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications