Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 அப்பாக்கள்..5 மகன்கள்-கர்நாடகா அரசியலில் 'பரம்பரை'யாக கோலோச்சும் மாஜி முதல்வர்களின் "வாரிசு"கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியை மகன் விஜயேந்திராவுக்காக போராடி வாங்கி தந்துவிட்டார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. கர்நாடகாவில் லிங்காயத்துகள் ஓட்டுகளை முன்வைத்தே மகனுக்கு மாநில தலைவர் பதவியை வாங்கி சாதித்திருக்கிறார் எடியூரப்பா.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியல் என்பது இல்லாமல் இல்லை. வாரிசு அரசியல் பட்டியலில் அதுவும் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களின் மகன்கள் கோலோச்சுவது என்னவோ கர்நாடகாவில்தான் அதிகம்.

Dynastic leaders play major role in Karnataka Politics

கர்நாடகா அரசியலில் இப்போது அறியப்பட்ட தலைவர்களாக இருக்கும் பசவராஜ் பொம்மை (பாஜக), குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), விஜயேந்திரா (பாஜக), மது பங்காரப்பா (காங்கிரஸ்), பிரியங் கார்கே (காங்கிரஸ்), நிகில் குமாரசாமி( மதச்சார்பற்ற ஜனதா தளம்) அனைவருமே அரசியல் வாரிசுகள். இவர்களில் 5 பேர் முன்னாள் முதல்வர்களின் மகன்கள்.

பசவராஜ் பொம்மை: பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகாவின் முன்னாள் முதல்வர். கர்நாடகா மாநிலத்தின் 4-வது முதல்வர் என்ற பெருமைக்குரியவர். 1970களின் தொடக்கத்தில் காங்கிரஸிலும் 1977-ல் இருந்து 'ஜனதா' அரசியலிலும் செல்வாக்கான தலைவராக விளங்கியவர். 1990-ல் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக, 1999-ல் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்தவர். பின்னர் அகில இந்திய முற்போக்கு ஜனதா தளம் என்ற புதிய ஜனதா கட்சிகளின் ஒன்று சேர்ந்த கட்சியின் தலைவராக இருந்தார். எஸ்.ஆர்.பொம்மை 1988-89-ம் ஆண்டு முதல்வராக இருந்த போது அவரது அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்த வழக்குதான் மாநில உரிமைகள் தொடர்பாக இன்றும் பேசப்படுகிற எஸ்.ஆர்.பொம்மை வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னர்தான் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் மத்திய அரசு கவிழ்க்கும் போக்கு முடிவுக்கும் வந்தது. எஸ்.ஆர். பொம்மையின் மகன்களில் ஒருவரான பசவராஜ் பொம்மை, கர்நாடகா பாஜக ஆட்சியில் 2021-ல் முதல்வரானார். இப்போதும் கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார் பசவராஜ் பொம்மை.

குமாரசாமி: குமாரசாமியின் தந்தை கர்நாடகா முன்னாள் முதல்வர் மட்டுமல்ல; நாட்டின் பிரதமராக இருந்த தேவ கவுடா. தேவ கவுடாவின் குடும்ப கட்சியாக இருப்பது மதச்சார்பற்ற ஜனதா தளம். தேவ கவுடா குடும்பத்தில் அனைவருமே தீவிர அரசியலில் ஈடுபடுகிறவர்கள்; தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறவர்கள். கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி. குமாரசாமியும் கர்நாடகா முதல்வராக 2018-ல் பதவி வகித்தவர். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் இப்போது தீவிர அரசியலில் அடுத்த வாரிசாக வலம் வருகிறார்.

விஜயேந்திரா: தென்னிந்தியாவில் கர்நாடகாவில் பாஜகவை காலூன்ற வைத்த தலைவரான முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன். கர்நாடக்காவின் இன்னொரு பெரும்பான்மை ஜாதியான லிங்காயத் வாக்குகளை பாஜகவுக்கு பெற்றுத் தந்தவர் எடியூரப்பா. இதனை காரணமாக வைத்தே இப்போதும் பாஜக மேலிடத்தை மிரட்டி காரியம் சாதிப்பவர். இதனை வைத்தே மகன் விஜயேந்திராவை மாநில பாஜக தலைவராக்கிவிட்டார் எடியூரப்பா.

மது பங்காரப்பா: 1990-ல் கர்நாடகா முதல்வராக பதவி வகித்தவர் பங்காரப்பா. இவரது ஆட்சியில்தான் 1991-ல் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இவரது மகன் மது பங்காரப்பா, தற்போதைய முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமைச்சராக வலம் வருகிறார். இவர்களுடன் இணைந்தவர் பிரியங் கார்கே. இவரது தந்தை மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+