தொடர்ந்து ‛டிமிக்கி’.. பைஜூஸ் நிறுவனத்தின் சிஇஓ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை..
பெங்களூர்: வெளிநாடு நேரடி முதலீடு தொடர்பான முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் இன்று அதிரடியாக நுழைந்து அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகா தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பைஜூ ரவீந்திரன் உள்ளார்.

இந்நிலையில் தான் பைஜூ நிறுவனம் வெளிநாட்டு நிதிகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான தனிநபர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்தனர்.
அதாவது பைஜூஸ் நிறுவனம் 2011ல் தொடங்கப்பட்ட நிலையில் அன்று முதல் 2023ம் ஆண்டு காலக்கட்டத்தில் வெளிநாடு நேரடி முதலீடு மூலம் ரூ.28 ஆயிரம் கோடி வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு அதிகார வரம்புக்கு உட்பட்டு வெவ்வேறு வகைகளில் 9,754 கோடி வரை வெளிநாடுகளுக்கு செலவு எனும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வெளிநாடு நேரடி முதலீட்டு விவகாரத்தில் விதிமீறல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி பைஜூஸ் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் முறைப்படி ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை சம்மனை அவர் புறக்கணித்தார். இதனால் அவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் இன்று பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரனின் பெங்களூர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பெங்களூரில் உள்ள அவரது 2 வீடு மற்றும் ஒரு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் டேட்டாக்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications