"மத்திய அரசுக்கு அதிகாரமே இல்லை.." கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு போட்ட எலான் மஸ்க் தரப்பு! பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் இப்போது மத்திய அரசுக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதாவது ஆன்லைனில் உள்ள கன்டென்ட்களை நீக்குவது குறித்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்

இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. பல நேரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுமே கூட சமூக வலைத்தள பக்கங்களிலேயே வருகிறது. அதேநேரம் மற்றொரு புறம் சமூக வலைத்தள கன்டென்ட்கள் சென்சார் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

Elon Musk Central govt

எக்ஸ் நிறுவனம் வழக்கு

இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிராக எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதாவது ஐடி சட்டத்தின் பிரிவு 79(3)(b) மற்றும் சஹ்யோக் போர்ட்டலை பயன்படுத்தி, சட்டப்பூர்வ பாதுகாப்புகளைத் தவிர்த்து, சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சென்சார் முறைகளை மத்திய அரசு பின்பற்றுவதாகவும் இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் எக்ஸ் நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது..

மத்திய அரசுக்கு எதிராக வழக்கு

ஆன்லைனில் உள்ள கன்டென்ட்களை அரசு நீக்க வேண்டும் என்றால் பிரிவு 69Aஇன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஆன்லைன் கன்டென்ட்களை நீக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசு அந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதே எக்ஸ் நிறுவனத்தின் வாதம். மேலும், சட்டப்பிரிவு பிரிவு 79(3)(b)-க்கு தவறான விளக்கம் கொடுத்து, அதை வைத்து மட்டுமே கன்டெண்ட்களை நீக்க மத்திய அரசு உத்தரவிடுவதாக எக்ஸ் நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

Elon Musk Central govt

ஆங்கில ஊடகமான மனிகண்ட்ரோல் இந்த மனு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ அளிக்கும் பதில்கள் குறித்து விளக்கமளிக்கச் சொல்லி எக்ஸ் அதிகாரிகளிடம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், இந்த மனு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சஹ்யோக் போர்ட்டலில் சேராததற்காக எக்ஸ் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. அதேநேரம் வரும் காலங்களில் இந்த விஷயத்தில் எக்ஸ் நிறுவனம் மீது அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தை நாட எக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.. இந்த மனு அடுத்த மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

முதல்முறை இல்லை

அதேநேரம் மத்திய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டில், பிரிவு 69A இன் கீழ் கன்டென்ட்களை நீக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது மத்திய அரசின் உத்தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவை பேச்சு சுதந்திரத்தை மீறும் வகையில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிக்கப்படும் நடைமுறைகள்

இப்போது எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் சில முக்கிய கருத்துகளை முன்வைத்துள்ளது. அதாவது கன்டென்ட்களை நீக்கப் பிரிவு 69Aஇல் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் பிரிவு 79(3)(b) மூலமாக மட்டும் அதிகாரிகள் உத்தரவிடுவதாக வாதத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் கன்டென்ட் நீக்கம் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தைக் கொடுப்பது, உரிய விசாரணை என பல்வேறு நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று எக்ஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது..

எக்ஸ் நிறுவனம் தனது மனுவில், "ஷ்ரேயா சிங்கால் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிரிவு 69A மட்டுமே கன்டென்டுகளை நீக்கும் அதிகாரமாக உறுதி செய்தது. ஏனெனில் அது பல பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. அதேநேரம் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் பிரிவு 79(3)(b) இருப்பதில்லை. அதில் எந்தவொரு முறையான நடைமுறைகளும் இருப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elon Musk Central govt

சஹ்யோக் குறித்து கேள்வி

எக்ஸ் நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் அமைப்பான சஹ்யோக் (Sahyog) போர்ட்டல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சஹ்யோக் போர்ட்டல் மூலம் மாநில காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் பிரிவு 69Aஇன் கீழ் உரியச் செயல்முறையைக் கடைப்பிடிக்காமல் நேரடியாக கன்டென்ட்களை நீக்கும் கோரிக்கையை வழங்குகிறது.

இது சென்சார் அதிகாரத்தை இந்த போர்டலுக்கு வழங்குகிறது என்றும் இதன் மூலம் கன்டென்டுகளை நீக்கப் பல ஆயிரம் உத்தரவுகள் வெளிப்படைத்தன்மை அல்லது மேற்பார்வை இல்லாமல் பிறப்பிக்கப்படுவதாகவும் எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அதிகாரம் இல்லை

மேலும், சஹ்யோக் தளத்தில் ஒரு கன்டென்ட்டை நீக்கக் கோரிக்கை வரும் போது, அதை பிராசஸ் செய்ய எளிதாக்கும் வகையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதையும் எக்ஸ் நிறுவனம் தனது மனுவில் எதிர்த்துள்ளது. அரசு இதுபோல நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட எந்தவொரு சட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பது எக்ஸின் வாதமாக இருக்கிறது.

எக்ஸ் நிறுவனத்தின் மனு தொடர்பாக நடந்த முக்கிய வாதங்கள்

சட்டப்பூர்வ தன்மை: பிரிவு 79(3)(b) என்பது பாதுகாப்பான சூழலை உருவாக்க உள்ள சட்டம். அதை வைத்து கருத்துகளை சென்சார் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை.

அரசியலமைப்பு உரிமைகளை மீறுதல்: சட்டப்பிரிவு 79(3)(b) மூலம் கன்டென்டுகளை நீக்க உத்தரவிடுவது பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறது.

சட்ட நடைமுறை: கன்டென்டுகளை நீக்கப் பிரிவு 69A மட்டுமே சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அதில் உரிய விசாரணைகள், எழுத்துப்பூர்வ விளக்கம், மேல்முறையீடு செய்யும் உரிமை ஆகியவை இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் தற்போதைய நடைமுறையில் அவை அனைத்தும் மீறப்படுகிறது.

எக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைகள்

பிரிவு 79(3)(b) மூலம் கன்டென்ட்களை நீக்க உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்பதை அறிவிக்க வேண்டும்.
பிரிவு 79(3)(b) இன் கீழ் இதுவரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இறுதி முடிவு எட்டப்படும் வரை சஹ்யோக் போர்ட்டலில் இருந்து வரும் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடாது.
ஆன்லைன் கன்டென்டுகளை தடுக்க பிரிவு 69A மட்டுமே ஒரே சட்டப்பூர்வ வழிமுறை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

முதல்முறை இல்லை

அதேநேரம் மத்திய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டில், பிரிவு 69A இன் கீழ் கன்டென்ட்களை நீக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது மத்திய அரசின் உத்தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவை பேச்சு சுதந்திரத்தை மீறும் வகையில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிக்கப்படும் நடைமுறைகள்

இப்போது எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் சில முக்கிய கருத்துகளை முன்வைத்துள்ளது. அதாவது கன்டென்ட்களை நீக்க பிரிவு 69Aஇல் உள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் பிரிவு 79(3)(b) மூலமாக மட்டும் அதிகாரிகள் உத்தரவிடுவதாக வாதத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் கன்டென்ட் நீக்கம் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தை கொடுப்பது, உரிய விசாரணை என பல்வேறு நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று எக்ஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது..

எக்ஸ் நிறுவனம் தனது மனுவில், "ஷ்ரேயா சிங்கால் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிரிவு 69A மட்டுமே கன்டென்டுகளை நீக்கும் அதிகாரமாக உறுதி செய்தது. ஏனெனில் அது பல பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. அதேநேரம் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் பிரிவு 79(3)(b) இருப்பதில்லை. அதில் எந்தவொரு முறையான நடைமுறைகளும் இருப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்யோக் குறித்து கேள்வி

எக்ஸ் நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் அமைப்பான சஹ்யோக் (Sahyog) போர்ட்டல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சஹ்யோக் போர்ட்டல் மூலம் மாநில காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் பிரிவு 69Aஇன் கீழ் உரிய செயல்முறையை கடைபிடிக்காமல் நேரடியாக கன்டென்ட்களை நீக்கும் கோரிக்கையை வழங்குகிறது.

இது சென்சார் அதிகாரத்தை இந்த போர்டலுக்கு வழங்குகிறது என்றும் இதன் மூலம் கன்டென்டுகளை நீக்க பல ஆயிரம் உத்தரவுகள் வெளிப்படைத்தன்மை அல்லது மேற்பார்வை இல்லாமல் பிறப்பிக்கப்படுவதாகவும் எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அதிகாரம் இல்லை

மேலும், சஹ்யோக் தளத்தில் ஒரு கன்டென்ட்டை நீக்க கோரிக்கை வரும் போது, அதை பிராசஸ் செய்ய எளிதாக்கும் வகையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதையும் எக்ஸ் நிறுவனம் தனது மனுவில் எதிர்த்துள்ளது. அரசு இதுபோல நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட எந்தவொரு சட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பது எக்ஸின் வாதமாக இருக்கிறது.

எக்ஸ் நிறுவனத்தின் மனு தொடர்பாக நடந்த முக்கிய வாதங்கள்

  • சட்டப்பூர்வ தன்மை: பிரிவு 79(3)(b) என்பது பாதுகாப்பான சூழலை உருவாக்க உள்ள சட்டம். அதை வைத்து கருத்துகளை சென்சார் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை.
  • அரசியலமைப்பு உரிமைகளை மீறுதல்: சட்டப்பிரிவு 79(3)(b) மூலம் கன்டென்டுகளை நீக்க உத்தரவிடுவது பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறது.
  • சட்ட நடைமுறை: கன்னெட்களை நீக்க பிரிவு 69A மட்டுமே சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அதில் உரிய விசாரணைகள், எழுத்துப்பூர்வ விளக்கம், மேல்முறையீடு செய்யும் உரிமை ஆகியவை இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் தற்போதைய நடைமுறையில் அவை அனைத்தும் மீறப்படுகிறது.

எக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைகள்

  • பிரிவு 79(3)(b) மூலம் கன்டென்ட்களை நீக்க உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்பதை அறிவிக்க வேண்டும்.
  • பிரிவு 79(3)(b) இன் கீழ் இதுவரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
  • இறுதி முடிவு எட்டப்படும் வரை சஹ்யோக் போர்ட்டலில் இருந்து வரும் உத்தரவுகளை அமல்படுத்த கூடாது.
  • ஆன்லைன் கன்டென்டுகளை தடுக்க பிரிவு 69A மட்டுமே ஒரே சட்டப்பூர்வ வழிமுறை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+