புலியை பார்க்க முடியவில்லை.. பந்திப்பூர் காட்டில் கண்கள் சிவந்த மோடி? சபாரியில் கோபம்? என்ன நடந்தது?
பெங்களூர்: பந்திப்பூர் காட்டில் புலியை பார்க்க முடியாத காரணத்தால் பிரதமர் மோடி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. பந்திப்பூர் காட்டுப்பகுதியில் பிரதமர் மோடி சபாரி சென்ற போது இந்த நிகழ்வு நடந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இடையில் பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு அதிகம் பயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதையடுத்து அங்கு பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அங்கு பாஜகவிற்கு எதிராக தேர்தல் முடிவுகள் வரலாம் என்று கருத்து கணிப்புகள் சொல்வதால், பிரதமர் மோடி தீவிர களப்பணிகளை செய்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்த பயணம் முடித்து மறுநாள் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கர்நாடகா - கேரளா எல்லையில் இருக்கும் பந்திப்பூர் காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கே அவர் ஜங்கிள் சபாரி மேற்கொண்டார். அதோடு வனப்பகுதியில் விலங்குகளையும், மரங்களையும், பறவைகளையும் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்வில் காட்டில் இருக்கும் போட்டோகிராபர் போல தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு ஜீப்பில் பயணம் மேற்கொண்டார். 22 கிமீ தூரத்திற்கு பிரதமர் மோடி காட்டிற்குள் சென்றார். அங்கே பல விலங்குகளை பார்த்தார். யானைகள், மான்கள், பல்வேறு பறவைகளை பார்த்தார்.
பிரதமர் மோடி கிட்டத்தட்ட 30 யானைகளையும், 250 மான்களையும் அங்கு இருந்த அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டி உள்ளார்.
இந்த நிலையில்தான் பந்திப்பூர் காட்டில் புலியை பார்க்க முடியாத காரணத்தால் பிரதமர் மோடி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. பந்திப்பூர் காட்டுப்பகுதியில் பிரதமர் மோடி சபாரி சென்ற போது இந்த நிகழ்வு நடந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அதன்படி மோடி புலியை பார்க்க முடியாத காரணத்தால் அங்கே சபாரி வாகனம் ஓட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாகிகள் கோபம்:அவர்களின் வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஜனை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம். பிரதமர் மோடி சென்ற சபாரி வாகனத்தை ஓட்டிய 29 வயது நிரம்பிய மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில மூத்த அதிகாரிகளும், பாஜக தலைவர்களும் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.
அந்த பாதையில் ஏற்கனவே புலி சென்ற காரணத்தில்தான் அதை தேர்வு செய்து உள்ளனர். ஆனால் மோடி சென்ற சமயத்தில் அங்கே புலி இல்லை. டிரைவர் நினைத்து இருந்தால் அவர் ரூட்டை மாற்றி இருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதனால் அவர் மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
மோடி கோபம்:இன்னொரு பக்கம் பிரதமர் மோடியோ இந்த சம்பவம் காரணமாக தனது சொந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது கோபத்தில் இருக்கிறாராம்.
அதன்படி, மதுசூதனன் ஏற்கனவே பைனலைஸ் செய்யப்பட்ட சாலையில்தான் சென்றார். அவர் மீது தவறு இல்லை. பிரதமர் மோடியின் பாதுகாவலர்கள் மீதுதான் தவறு. அவர்கள்தான் பிரதமர் மோடி வரும் முன்னர் அங்கே வாகனத்தை வைத்து ரோந்து பணிகளை செய்தனர். இப்படி அடிக்கடி வாகனம் போனால் புலி அந்த சாலையில் வராது என்று நாங்களும் கூறினோம்.

அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் எஸ்பிஜி படையில் நக்சல் தடுப்பு பிரிவு, உள்ளூர் போலீசாரும் இருந்தனர். சபாரியில் கான்வாய் போல அமைத்து இருந்தனர். அப்போதே நாங்கள் இதை பற்றி சொன்னோம். நிறைய வாகனங்கள் சென்றால் புலியை பார்க்க முடியாது.
அதுதான் நடந்தது. இதைதான் மோடியிடம் விளக்கினோம். மோடி அதை கேட்டுக்கொண்டார்.
அதை கேட்டு.. கடைசியில் புலியை பார்க்க முடியவில்லை என்று மோடி வருத்தப்பட்டார். அவரிடம் விளக்கிய பின் அவர் எஸ்பிஜி அதிகாரிகள் மீது கோபம் அடைந்தார், என்று பந்திப்பூர் வன ஊழியர்கள் விளக்கி உள்ளனர்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications