பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- எடியூரப்பாவுக்கு ஷாக் கொடுத்த பாஜக - அறிமுகம் இல்லாத 2 பேர் வேட்பாளர்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பமாக அறிமுகம் இல்லாத 2 பேரை பாஜக தமது வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த கர்நாடகா பாஜகவுக்கே மேலிடம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

Recommended Video

    தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்

    கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார்.

    Eranna Kadadi and Ashok Gasti.. Karnataka BJPs Rajya Sabha candidates

    காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தேவகவுடா ராஜ்யசபா எம்.பியாவது 2வது முறை.

    அதேநேரத்தில் பாஜகவுக்கு 2 எம்.பிக்கள் கிடைப்பது உறுதி என்ற நிலையிலும் யார் வேட்பாளர் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. முதல்வர் எடியூரப்பா தரப்பு 4 பேரை பரிந்துரைத்து டெல்லிக்கு அனுப்பி இருந்தது.

    மேலும் பலரும் டெல்லி மேலிடத்துடன் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக எரன்னா கடாடி, ராய்ச்சூர் அசோக் காஸ்டி ஆகியோரை பாஜக மேலிடம் ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது.

    கேரளா: கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல் கேரளா: கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல்

    இது கர்நாடகா பாஜக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. ஏனெனில் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களுக்கே இவர்கள் யாரென்று தெரியாது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் கட்சியின் கீழ்மட்டத்தில் பணியாற்றுகிறவர்களை மேலிடம் அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்கிற ஆதரவும் இன்னொரு பக்கம் இருந்து வருகிறது.

    English summary
    The BJP had announced that the candidature of Eranna Kadadi and Ashok Gasti for Rajya Sabha elections in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X