பெங்களூர் ரோட்டில் சல்லுனு காரில் போறது யார் பாருங்க? சிலிர்த்து நின்ற பெங்களூரு ஈரடுக்கு மேம்பாலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் வீடியோ ஒன்று இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?

பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது.. இந்த நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது.. எனவே இப்போது செல்லகட்டா -- ஒயிட்பீல்டு, நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.

Bangalore Bengaluru

ரயில் பாதைகள்: அதேபோல, ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இங்கு ஓடவிருக்கின்றன. இந்த புதிய ரயில் பாதையில்தான், ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் 3.36 கி.மீ., துாரத்திற்கு ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் ஆரம்பமாயின.. இந்த பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டது

முதல் பாலத்தில் வாகனமும், இரண்டாவது பாலத்தில் மெட்ரோ ரயிலும் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. . இதன் மூலம் ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாலம்: கடந்த மாதம் 15ம் தேதி முதல் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போதுதான் பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகுதான் புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை துணை முதல்வர் சிவகுமார் ஜூலை 17 ம் தேதி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே ராகி குட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்று, புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த ஈரடுக்கு மேம்பாலம் ஓசூர் ரோட்டை நோக்கி பயணிக்கும் 30 சதவீதம் வாகன ஓட்டிகளுக்கு பயன் அளிக்கும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேம்பாலம்:
பெங்களூரில் 9.50 கி.மீ.,க்கு, 5,475 கோடி ரூபாய் செலவில், 5 வழி சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்திற்கான செலவை பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் பகிர்ந்து கொள்ளும் என்றும் வரும் நாட்களில் மெட்ரோ ரயில் பாதைகளுக்கு, ஈரடுக்கு மேம்பாலம் மாதிரியே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டியதில், அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள்..

ஈரடுக்கு மேம்பால திறப்பு நிகழ்ச்சியில் சிவகுமார் பேசும்போது, "ராகிகுட்டா -- சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் கட்டப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்திருக்கிறேன்.. இந்த மேம்பாலத்தை கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவது சவாலாக இருந்தது. இந்த மேம்பாலம் கட்ட செலவு அதிகமாகி விட்டது என்றாலும், போக்குவரத்து எளிதாவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

சில்க் போர்டு: முன்னதாக, ராகி குட்டாவிலிருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை சிவகுமார் கார் ஓட்டினார்... காரின் முன் பக்க சீட்டில், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி உட்கார்ந்திருந்தார்.. ஈரடுக்கு பாலத்தில் சிவக்குமார் அசத்தலாக கார் ஓட்டும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதுமே சோதனை அடிப்படையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது... நேற்றைய தினமும் ஒரு சில வாகனங்கள் புதிய மேம்பாலத்தில் பயணம் செய்தன.. தென் மாநிலங்களிலேயே முதல் முறையாக இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+