கடவுளே நினைத்தாலும் பெங்களூரை காப்பாற்ற முடியாது.. துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேச்சு
பெங்களூர்: கர்நாடகாவில் டிராபிக் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பிரச்சினை எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே கடவுளே நினைத்தாலும் பெங்களூரை காப்பாற்ற முடியாது என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரின் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வீக் எண்ட் நேரம் வெளியே சென்றால் திரும்பவே பல மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு டிராபிக் உச்சத்தில் இருக்கும்.

இதற்கிடையே கர்நாடகாவின் துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் பெங்களூர் டிராபிக் குறித்தும் உள்கட்டமைப்பு குறித்தும் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அது இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது
அதிவேகமாக நகரமயமாக்கலானதே பெங்களூர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்பதைக் குறிப்பிட்ட கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார், கடவுளே தலையிட்டாலும் கூட பெங்களூரை உடனடியாக மீட்க முடியாது என்றார். இது தொடர்பாக டி கே சிவக்குமார் மேலும் கூறுகையில், "நான் உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது கடவுளே நேரடியாகச் சொர்க்கத்தில் இருந்து இறங்கி பெங்களூர் தெருக்களில் நடந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் எதுவும் மாறாது.
பெங்களூரின் நிலைமை மிகவும் சவாலானது. சரியாகத் திட்டமிட்டு பிளான்களை திறம்படச் செயல்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார். டி கே சிவக்குமாரின் இந்த கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வெடித்த சர்ச்சை
பெங்களூரில் டிராபிக் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, மெட்ரோ விரிவாக்கம் தாமதம், பொது போக்குவரத்து போதியளவு இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் அம்மாநில துணை முதல்வரின் கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.
பொருளாதார வல்லுநரும் ஆரின் கேபிடல் தலைவருமான மோகன்தாஸ் பாய் இது தொடர்பாகத் தனது ட்விட்டரில், "அமைச்சர் டி.கே. சிவக்குமார், நீங்கள் எங்கள் அமைச்சராகி இரண்டு வருடங்கள் ஆகிறது! சிறந்த அமைச்சராக இருப்பீர்கள் என உங்களைப் பாராட்டி வரவேற்றோம். ஆனால் எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது!
தயவு செய்து உதவுங்கள்
பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், எந்த திட்டமும் சரியான நேரத்தில் முடிவடையாததால் தேவையற்ற மிக நீண்ட தாமதம் ஏற்படுகிறது. நகரத்தை மேம்படுத்தச் சுத்தமான நடைபாதைகளை ஏற்படுத்த ஏன் முடியவில்லை? பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த நீங்கள் ஏன் 5000 புதிய EV பேருந்துகளை அவசரமாக வாங்க முடியாது? மெட்ரோ கட்டுமானத்தை ஏன் உங்களால் விரைவுபடுத்த முடியவில்லை?
தயவு செய்து இதில் கவனம் செலுத்தி எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். எங்கள் வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகிறது. இதில் மோசமான முறையில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ கட்டண உயர்வு வேறு.. மெட்ரோ கட்டண உயர்வால் மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்தது. இது மோசமான நிர்வாகத்தின் மற்றொரு உதாரணம். உங்கள் மேற்பார்வை எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. நீங்கள் எங்கள் வலிமையான அமைச்சர்.. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
பாஜக விமர்சனம்
அதேபோல கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பாஜக தலைவருமான அசோகாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பிறகு இப்போது கடவுளே வந்தாலும் அடுத்த 2-3 ஆண்டுகளுக்குப் பெங்களூர் நகரை மாற்ற முடியாது என அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உங்கள் அரசு மீது இருந்த எதிர்பார்ப்போ எப்போதோ போய்விட்டது. காங்கிரஸ் அரசு கர்நாடகா மற்றும் பெங்களூருவுக்குச் சாபமாகவே இருக்கிறது. இந்த அரசைக் கர்நாடக மக்கள் தூக்கி எறிய தயாராகிவிட்டனர்" என்று சாடியுள்ளார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில்.. இடம் பிடித்த இந்தியன் சிட்டி! பெங்களூருக்கு தனி மவுசுதான்! -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு!












Click it and Unblock the Notifications