பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன எல்லையில் நடப்பது என்ன?.. உண்மையை சொல்லுங்கள்.. பிரதமரிடம் தேவ கௌடா கோரிக்கை

Google Oneindia Tamil News

பெங்களூர்: சீன எல்லையில் நடப்பது என்ன என்பது குறித்து பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகௌடா தனது ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய தரப்பில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். எல்லையில் பதற்றம் தணிவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது போல் சீனாவின் அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

EX PM Deve Gowda asks PM Modi to tell the truth about the border tension

இந்த நிலையில் இந்திய வீரர்கள் வீரமரணம் குறித்து முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வரும் தகவல்கள் மனதிற்கு வேதனையை தருகிறது.

EX PM Deve Gowda asks PM Modi to tell the truth about the border tension

பதற்றம் தணிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறும் நிலையில் நமது இந்திய வீரர்கள் ஏன் மரணமடைந்தனர்? எல்லையில் நடப்பது என்ன? தேச நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவாக விளக்க வேண்டும் என்றார் கௌடா.

லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!

English summary
Former Prime Minister HD Deve Gowda urged the PM Modi and Defence Minister Rajnath Singh to tell the nation the truth about the faceoff with China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X