தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டெல்லியில் விவசாயிகள் சங்கங்கள் நடத்தி வரும் நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என கர்நாடகா வேளாண்துறை அமைச்சர் பி.சி. பாட்டீல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த 8 நாட்களாக தலைநகர் டெல்லியில் கடுங்குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

4 கட்டங்களாக இதுவரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். ஆனாலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் பொன்னாம்பட்டில் உள்ள மூங்கில் வளர்ப்போரை கர்நாடகா மாநில அமைச்சர் பி.சி. பாட்டீல் கலந்து கொண்டு பேசினார்.

விவசாயிகள்

விவசாயிகள்

சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் வேளாண் தொழிலை எப்படி லாபகரமாக நடத்துவது என்பதை விளக்கினார். அப்போது அவர் கூறுகையில் விவசாயத்தில் நஷ்டம் என்பதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் உண்மையில் கோழைகள்.

குழந்தைகள்

குழந்தைகள்

மனைவி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாத கோழைதான் இது போல் தற்கொலை செய்து கொள்வார். தண்ணீரில் விழுந்துவிட்டால் நீந்தி மேலே வர வேண்டும் என்றார். கோழைகள் என விவசாயிகளை அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

இதற்கு காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில செய்தித் தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் கூறிய கருத்துகள் விவசாயிகளை அவமதிப்பதாகும். இதற்காக அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

பொறுப்பற்றத்தனம்

பொறுப்பற்றத்தனம்

எந்த விவசாயிகளும் தங்களது வாழ்வை முடித்து கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் அதற்கு வறட்சி, வெள்ளம் காரணமாகும். விவசாயிகளின் பிரச்சினை இன்னமும் புரிந்து கொள்ளப்படவில்லை, தீர்த்து வைக்கப்படவும் இல்லை. பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் ஒரு அமைச்சர் இது போன்ற பொறுப்பற்ற கருத்தை முன் வைக்கிறார் என்றார் உக்ரப்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+