மிகப்பெரிய சாதனை! முதல் முறையாக சூரியனின் Full disk படங்களை எடுத்த ஆதித்யா எல்1.. வெளியிட்டது இஸ்ரோ!
பெங்களூர்: ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் முழு வட்டு (Full-disk) புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.
சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' எனும் பகுதியில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி, சூரிய அனலில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர் அலைநீளங்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29ஆம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல்1 அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆதித்யா விண்கலத்தின் 2-ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர்கள் மூலம் இயங்கும் தொலைநோக்கி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது.

அதில், சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் படம்பிடித்துள்ளது ஆதித்யா எல் 1. 200 முதல் 400 nm வரையிலான அலைநீளங்களில் சூரியனின் முதல் முழு-வட்டு புகைப்படங்கள் ஆதித்யா எல் 1 மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் படங்கள் சூரியனின் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான ஆராய்ச்சிகளுக்கு பெரிய திறப்பை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications