கரையில் மட்டுமல்ல,இனி கடலிலும் நோ குற்றம்.. ஸ்கூபா டைவிங் பயிற்சியில் தமிழ்நாடு போலீஸ்
சென்னை: தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் முதல்முறையாக ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றனர். இது தமிழ்நாடு காவல் துறையை நிச்சயம் வலுப்படுத்தும்.
Recommended Video
இந்திய வரலாற்றிலேயே கருப்பு நாள் என்றால் அது நவம்பர் 26ஆம் தேதி தான். கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26இல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக போலீசார்
இந்தத் தாக்குதலில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் தான் கடலோர பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மாநிலத்திலும் கடலோர பாதுகாப்புப் படை மத்திய அரசு ஏற்படுத்தியது. அப்போது கர்நாடக போலீசார் அடுத்த லெவலுக்கே சென்றனர்.

ஸ்கூபா டைவிங் பயிற்சி
கர்நாடகா போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியை அம்மாநில அரசு அறிவித்தது. இந்தியாவிலேயே மாநில போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளித்த முதல் மாநிலம் கர்நாடகா தான். அங்குக் கடந்த 2013ஆம் ஆண்டு முதலே போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு போலீஸ்
அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்முறையாகத் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கும் ஸ்கூபா டைவிங் பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டது.

தீவிர பயிற்சி
முதலில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்கூபா டைவிங் குறித்தும் முக்கிய விஷயங்கள் குறித்தும் செமினார் நடத்தப்பட்டது. அதன் பிறகு நீச்சல் குளம் ஒன்றில் வீரர்களுக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாக நீர்ப்பிடிப்பு பகுதியிலும் போலீசார் ஸ்கூபா டைவிங் மேற்கொண்டனர்.

மகளிர் போலீஸ்
மேலும், இதில் ஆண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மகளிர் போலீஸ் அதிகாரிகளும் இந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் நீச்சல் குளம், வெளியே நீர்ப்பிடிப்பு பகுதி என இரண்டிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ரோயிங் பயிற்சி
இது தவிர அங்கு நதியில் ரோயிங் பயிற்சியையும் (துடுப்பு படகு) தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஸ்கூபா டைவிங் , ரோயிங் எனத் தமிழ்நாடு போலீசார் பயிற்சி பெறும் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications