பாஜகவுக்கு குட்பை! முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் வட கர்நாடகா மூத்த பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்து வெளியேறும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹூப்ளி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர் என கூறப்படுகிறது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜேடிஎஸ், காங்கிரஸ், பாஜக ஆகியவை ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

வேட்பாளர்கள் விவகாரத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் போல் இல்லாமல் பாஜகவில் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. பாஜகவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இந்தப் பட்டியலில் பாஜக மூத்த தலைவரும் வட கர்நாடகா பாஜகவின் முகமுமான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் இடம்பெற்றுள்ளார். ஹூப்ளி தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனால் இந்த முறை அவரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக கடும் அதிருப்தி குரல் எழுப்பினார் ஷெட்டர். டெல்லிக்கு சென்று நேரடியாகவும் பேசிப் பார்த்தார். ஆனால் பாஜக மேலிடம் இறங்கி வரவில்லை.

இதனையடுத்து பாஜகவில் இருந்து தாம் விலக முடிவு எடுத்துள்ளதாக நேற்று கூறினார் ஜெகதீஷ் ஷெட்டர். முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஹூப்ளி தொகுதியில் தாம் போட்டியிடுவேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இதனால் இன்று சட்டசபை சபாநாயகரை சந்தித்து தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஷெட்டர். இதனைத் தொடர்ந்து ஷெட்டரை வளைப்பதில் காங்கிரஸ் கட்சி படுமும்முரமாக இருக்கிறது.

ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகுவதால் வடக்கு கர்நாடகாவில் 30 தொகுதிகளை பாஜக பறிகொடுக்கும் நிலைமை உள்ளது. இதனை அறுவடை செய்ய காங்கிரஸ் களமிறங்கிவிட்டது. இதனால் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சியில் இணைக்கும் முயற்சிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications