கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் இன்று முதல் தொடக்கம்.. என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையான பெண்களுக்கான இலவச பஸ் பயணம் இன்று தொடங்கப்படுகிறது.
கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தன. அதில் காங்கிரஸ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அளிப்போம் என்றது.

அதன்படி காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் சில தேர்தல் வாக்குறுதிகளை அமலுக்கு கொண்டு வந்தார்.
அந்த வகையில் தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டம் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. கர்நாடகா மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இந்த இலவச பஸ் பயணம் கிடைக்கும்.
இதற்கு சக்தி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. சக்தி ஸ்மார்ட் கார்டுகளை பெற sevasindhu.karnataka.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும். எனினும் இந்த கார்டுகள் எப்போது கொடுக்கப்படும் என தெரியவில்லை. சக்தி ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கும் வரை வீட்டு முகவரி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பயணித்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
திருநங்கையர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டம் கர்நாடகா அரசு பேருந்துகளில் மட்டுமே செல்லும். ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், அம்பாரி, அம்பாரி ட்ரீம் கிளாஸ், ஏசி பேருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது. கர்நாடகா மாநிலத்தை சேராதவர்களுக்கு இந்த பெண்களுக்கு இந்ததிட்டம் பொருந்தாது.












Click it and Unblock the Notifications