கர்நாடகா சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு இலவச சாப்பாடு- தூங்க சொகுசு சாய்வு இருக்கைகள்- ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிற்பகல் உணவு இடைவேளைக்கு பின்னரும் தொடர்ந்து வருகை தர வேண்டும் என்பதற்காக அங்கேயே இலவச சாப்பாடு மற்றும் சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதற்கு சாய்வு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநில சட்டசபை கூட்டங்களில், காலையில் ஆஜராகிவிடும் எம்.எல்.ஏக்கள் மதிய உணவுக்கு எம்.எல்.ஏக்கள் விடுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு சாப்பிட்டுவிட்டு பிற்பகலில் நன்றாக உறங்கிவிடுகின்றனர். இதனால் பிற்பகலில் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடுகிறதாம்.

இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்திலேயே இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் யூடி காதர் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் கர்நாடகா சட்டசபை வளாகத்திலேயே எம்.எல்.ஏக்களுக்கு இலவச சாப்பாடு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் எம்.எல்.ஏக்கள் சிறிது நேரம் குட்டி தூக்கம் போட்டு அசதியைப் போக்க, சொகுசு சாய்வு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. இந்த சொகுசு சாய்வு நாற்காலிகள் சட்டசபை வளாகத்தில் போடப்பட்டிருக்கின்றன. முதல் கட்டமாக தற்போது 10 சொகுசு சாய்வு நாற்காலிகள் அங்கே வரவழைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டசபை கூட்டமானது வரும் 20-ந் தேதி வரை நடைபெறும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications