பெங்களூர் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் பையில் கிடந்த வெடிபொருட்கள்.. தாக்குதல் நடத்த சதியா?
பெங்களூர்: பெங்களூர் கலாசிபல்யா பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லட் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையில் ஜெலட்டின் குச்சிகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் அருகே வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் சிலிக்கான் வாலி என்று அழைக்கப்படும் பெங்களூர் நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். 24 மணி நேரம் பிசியாக இருக்கக் கூடிய பெங்களூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவறையில் பிளாஸ்டிக் பையில் சுற்றி வெடிபொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

6 ஜெலட்டின் குச்சிகள்
உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்களும் விரைந்து வந்தனர். வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து பெங்களூர் மாநகர துணை கண்காணிப்பளர் எஸ். கிருஷ் கூறியதாவது:-
பெங்களூர் கலசைபாலையா பிஎம்டிசி பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லட் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு ஆறு ஜெலட்டின் குச்சிகள் கிடந்தன. சில வெடிபொருட்களும் மற்றொரு பையில் இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
ஜெலட்டின் குச்சிகளை வைத்து சென்றது யார்?
இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெலட்டின் குச்சிகளை அங்கே வைத்துவிட்டு சென்றது யார்? ஏதேனும் அசம்பாவித நோக்கத்துடன் வைக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரக்ள். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிரிப்டோ கரன்சி மூலம்
பெங்களூர் மாநகரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் ஆகியோர் குற்றவாளிகள் எனத்தெரிவித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில், கிரிப்டோ கரன்சி மூலம் குற்றவாளிகள் நிதியுதவி பெற்று வந்ததாகவும், இந்த பணத்தை வைத்து, பெங்களூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷாஸிப்பும் அவரது கூட்டாளியான டாஹாவும் கர்நாடகத்தின் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications