‛‛சரி.. ரெடியா இருங்க’’.. பாஜக ஆதரவான சுதீப்புக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் சவால்! கடும் கோபம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் நடிகர் சுதீப், பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் விரும்பவில்லை. இந்நிலையில் தான் நடிகர் சுதீப்புக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் சவால் செய்துள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதேவேளையில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று இழந்த ஆட்சியை மீட்டெடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

இதேபோல் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியின் ஜேடிஎஸ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றன. இதேபோல் இன்னும் பல கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.
இந்நிலையில் தான் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சுதீப், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சுதீப் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் பசவாஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுதீப், பசவராஜ் பொம்மையுடன் பத்திரிகையாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது, ‛‛வரும் சட்டசபை தேர்தலில் எனது ஆதரவை முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு வழங்க உள்ளேன். அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக அவரை மாமா என்ற உறவு முறை கூறி அழைத்து வருகிறேன். எனது கஷ்டகாலத்தில் அவர் உதவினார். இதனால் நன்றி மற்றும் மரியாதைக்காக அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். நான் பாஜகவில் இணையவில்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு மட்டுமே அளிக்கிறேன். '' என்றார்.
இந்நிலையில் நடிகர் சுதீப்பின் இந்த நடவடிக்கையை நடிகர் பிரகாஷ் ராஜ் விரும்பவில்லை. இதனால் அவர் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛டியர் சுதீப்.. அனைவராலும் விரும்பப்படும் கலைஞனாக, மக்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் உங்களுக்கென தனிசாயம் பூச ஒரு அரசியல் கட்சியை தேர்வு செய்துள்ளீர்கள். சரி இருக்கட்டும். பதிலளிக்க தயாராகுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு மக்களும் உங்களையும், உங்கள் கட்சியையும் பார்த்து கேள்வி எழுப்புவார்கள்'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சுதீப் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியானது. இதை பார்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஷாக் ஆனார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் தோல்வியின் விளிம்பில் உள்ள பாஜக இதுபோன்ற போலியான செய்திகளை பரப்புகிறது என கூறியிருந்தார். இந்த பதிவை பிரகாஷ் ராஜ் செய்திருந்த அடுத்த நாளே நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications