'தங்க கடத்தல்' தமிழ் நடிகை ரன்யா ராவ்- வளர்ப்பு தந்தை டிஜிபி கூட்டாளியா? சிக்கும் அரசியல் 'தலைகள்'!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ் நடிகை ரன்யா ராவ் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான டிஜிபி, உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தங்க கடத்தல் நடிகை ரன்யா ராவ் கூட்டாளிகளாக இருந்ததாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கர்நாடகா அமைச்சர்கள் பலரது பெயர்களும் அடிபடுவதால் பெரும் பரபரப்பு தொடருகிறது.
வாகா என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரன்யா ராவ். அண்மையில் துபாயில் இருந்து 12 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்ததாக கர்நாடகா மாநிலம் பெங்களூர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ரன்யா ராவ். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தங்கக் கடத்தலுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு உடையை அணிந்தே 48 முறை துபாய்க்கு சென்று தங்க கட்டிகளை ரன்யா ராவ் கடத்தி வந்தது அம்பலமானது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ரன்யா ராவ் சென்று வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் ரன்யா ராவுக்கு உடந்தையாக இருந்தது யார்? அவரது கூட்டாளிகள் யார்? ரன்யா ராவின் பின்னணியில் இருக்கும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் குறித்தும் அடுத்தடுத்து தகவல்கள் யூகமாக வெளியாகி வருகின்றன. ரன்யா ராவிடம் இருந்தது தங்க கட்டிகளை வாங்கியதாக நட்சத்திர ஹோட்டல் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான கர்நாடகா மாநில டிஜிபி, உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் ரன்யா ராவுடன் கர்நாடகா மாநில அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கின்றன. ஆனால் இதனை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறுகையில், ரன்யா ராவ் விவகாரத்தில் கர்நாடகா அமைச்சர்கள் ஒருவருக்கு கூட தொடர்பே இல்லை. எங்களுக்கு இந்த விவகாரம் குறித்தே எதுவும் தெரியாது; மத்திய அரசின் விசாரணை அமைப்புகள்தான் விசாரணை நடத்தி வருகின்றன. அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு தொடர்பிருப்பதாக கூறுவது எல்லாம் அரசியல் கிசுகிசுக்கள்தான். அப்படி சந்தேகம் இருந்தால் விசாரணையும் நடத்திப் பார்க்கட்டும் என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!












Click it and Unblock the Notifications