பெங்களூர் லதா வீட்டில் கோடிக்கணக்கில் தங்கம்.. வாயில் துணியை திணித்து.. மிருகங்கள் செய்த வேலை
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் கமலா நகர் பால்கி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்த பிரகாஷ், காட்டன் பேட்டை பகுதியில் துணி வியாபாரம் செய்து வந்தார். அவர் சிறுக சிறுக சேர்த்து வைத்த தங்க நகைகளை மொத்தமாக ஸ்கெட்ச் போட்டு கும்பல் ஒன்று தூக்கி சென்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்த பிரகாஷின் மனைவி லதாவை கொள்ளையடிக்க வந்த மிருகங்கள், அவரது வாயில் துணியை திணித்து என்ன செய்தன தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் கமலா நகர் பால்கி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி லதாவுக்கு 50 வயது ஆகிறது. இத்தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். மகன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்த பிரகாஷ், காட்டன் பேட்டை பகுதியில் துணி வியாபாரம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம், நகை சேர்த்துள்ளார். நேற்று காலை பிரகாஷ் வழக்கம்போல கடைக்கு சென்றுவிட்டார். மகள் வேலைக்கும், மகன் பள்ளிக்கும் சென்றுவிட்டனர்.

லதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டுக்கு சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் யார்? என லதா விசாரித்தார். அப்போது அவர்கள் லதாவை தள்ளிவிட்டு திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, கத்தி கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள், வாயில் துணி வைத்து அமுக்கி தங்க நகைளை கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர் நகைகளை கொடுக்க மறுத்தாராம். இதனால் மர்மநபர்கள், லதாவின் முகத்தை துணியால் இறுக்கமாக மூடி அமுக்கி இருக்கிறார்கள்.
இதில் லதா, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் மதியம் சாப்பிடுவதற்காக பிரகாஷ் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு திறந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.. அப்போது வீட்டுக்குள் லதா பிணமாக கிடப்பதை கண்டு பிரகாஷ் அதிர்ந்து போனார். அத்துடன் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், தங்க நகைகள் மாயமாகி இருந்தது. அப்போது தான் யாரோ மர்மநபர்கள் வீடு புகுந்து லதாவை கொன்று வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது அவருக்கு தெரியவந்தது.
வீட்டில் மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதுடன், மனைவியையும் கொள்ளை கும்பல் கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், காட்டன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் காட்டன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பிரகாஷ் தனது மகளின் திருமணத்துக்காக ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளை சேமித்து வைத்திருப்பதை அறிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக போலீசார் தனிப்படையும் அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications