வெறும் 24 மணி நேரத்தில் மாறிய முடிவு.. பாஜகவை அதிர வைத்த எதிர்ப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூரு: பெங்களூரு -மைசூரு விரைவுச்சாலை திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், 22 சதவீத சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் சுங்க கட்டண உயர்வு 24 மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு மைசூரு இடையே அமைக்கப்பட்ட 10 வழி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 12ம் தேதி திறந்து வைத்தார். விரைவு சாலையில் சர்வீஸ் சாலை பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சர்வீஸ் சாலை பணிகளை சரிவர முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு ராமநகர், மண்டியா மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையே கன்னட அமைப்புகள், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டன.

தேசிய நெடுஞ்சாலை
சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் பெங்களூரு -மைசூரு விரைவுச்சாலையில் 22 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் (ஏப்ரல் 1ம் தேதி) அமலுக்கு வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்தது.

22 சதவீதம்
இதன்படி கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு வழி பயணத்திற்கு ரூ.135 ஆக இருந்த கட்டணம் ரூ.30 உயர்த்தப்பட்டு, ரூ.165 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதுவே இருவழி பயணமாக இருந்தால் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது பழைய கட்டணத்தில் இருந்து கூடுதலாக ரூ.45 உயர்த்தப்பட்டது. சிறிய வாகனங்கள், மினி பஸ்களுக்கு ஒரு வழிக்கு ரூ.270 (ரூ.50 உயர்வு), இரு வழிக்கு ரூ.405 (ரூ.75 உயர்வு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுபோல், சரக்கு லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் 22 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

மக்கள் எதிர்ப்பு
இதனால் கொதித்து போன வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக 22 சதவீத கட்டண உயர்வுக்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் 22 சதவீத கட்டண உயர்வு செய்வது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த கட்டண உயர்வு பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்தது.

பாஜக அரசுக்கு சிக்கல்
இந்த நிலையில், விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த உத்தரவை வாபஸ் பெறுவதாகவும், இதற்கு முன்பாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே நிலையே தொடரும் என்றும், பெங்களூரு மைசூரு விரைவுச்சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்தது. இதன்மூலம் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்ட 22 சதவீத சுங்க கட்டண உயர்வு 24 மணிநேரத்திற்குள்ளேயே வாபஸ் ஆகி உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தர்ம சங்கடம் வேண்டாம் என்பதால், சுங்க கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications