பெங்களூர் உட்பட.. கர்நாடகா முழுவதும்.. அரசு பஸ்கள் ஓடவில்லை.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Recommended Video

    சென்னை டூ பெங்களூர்.. தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை.. 2வது நாளாக பயணிகள் அவதி - வீடியோ

    அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள்.

    இதையடுத்து, அந்த சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது.

    ஸ்ட்ரைக்

    ஸ்ட்ரைக்

    இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதை கண்டித்தும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள்

    தேர்தல் நடத்தை விதிமுறைகள்

    மாநிலத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சம்பள உயர்வு குறித்து தற்போது முடிவை அறிவிக்க முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமணன் சவதி கூறியுள்ளார். எனவே, ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவை கைவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் திட்டமிட்டப்படி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.

    பயணிகள்

    பயணிகள்

    கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 25 ஆயிரம் பஸ்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 7 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன. இதில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த பஸ்கள் இயங்காததால், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

    பெங்களூர் மெட்ரோ

    பெங்களூர் மெட்ரோ

    எனவே, பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை, மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. தனியார் டிரைவர்கள் மற்றும் பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். பெங்களூரைப் பொறுத்தளவில், மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. ஆனாலும் இவை போதிய அளவுக்கு பலன் தரவில்லை என பயணிகள் குமுறுகிறார்கள்.

    தமிழக பயணிகள்

    தமிழக பயணிகள்

    சென்னை, கோவை, சேலம், திருவண்ணாமலை, ஒசூர் உள்ளிட்ட தமிழக நகரங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பெங்களூர் உட்பட கர்நாடக நகரங்களுக்கு இயக்கப்படும் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் இன்று முதல் இயங்கவில்லை. எனவே பயணிகள் ரயில் மற்றும் தனியார் பஸ் சேவைகளை நம்பியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+